search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ops son"

    • நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.
    • புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக அவர் தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.

    தனக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என டிஜிபி உறுதி அளித்திருப்பதாக கூறினார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வரை சந்திப்பேன் என்றார்.

    மோடி தலைமையிலான புதிய மந்திரிசபையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு இடம் வழங்கப்படவில்லை.
    புதுடெல்லி:

    மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும், மோடி தலைமையிலான புதிய மந்திரி சபையில் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. 

    எனவே, தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2 மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது. கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் அல்லது மேல்-சபை எம்.பி.யான வைத்திலிங்கம் ஆகியோரில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என பேசப்பட்டது. 

    ஆனால், இன்று மோடி தலைமையிலான புதிய மந்திரிசபை பதவியேற்றபோது, அதிமுகவைச் சேர்ந்த யாரும் அதில் இடம்பெறவில்லை. 

    இதேபோல் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அவருக்கும் மந்திரிசபையில் இடம் வழங்கப்படவில்லை. 
    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்குமார் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார்.
    தேனி :

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இநத தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 54 ஆயிரத்து 51 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 55 ஆயிரத்து 565 வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் உள்ளார்.

    ம.நீ.ம - 29

    நாம் தமிழர் - 198
    தேனி தொகுதியில் தன்னை எதிர்த்து தினகரனே நின்றாலும் கவலை இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் கூறினார். #LSPolls #TheniConstituency
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேனி தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- தேனி தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும்.



    கே:- தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் உங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா?

    ப:- என்னை எதிர்த்து டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.  #LSPolls  #TheniConstituency
    ×