search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளியில்"

    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்ட பட்ட சிறு மின்விசை குடிநீர் தொட்டிகளை திறந்து வைக்க வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா சமுத்துவ புரத்தில் தற்காலிகமாக கட்டப்படவுள்ள பஸ் நிறுத்த இடத்தை பார்வையிட்டார். அதன்பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1996ல் துவக்கி வைத்த ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அப்பள்ளி ஆசிரியர்கள் பாம்பு தொல்லை இருப்பதாகவும், அதே போல் குடிதண்ணீர் பிரச்சினை உள்ளது எனவும், பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். பார்வையிட்ட எம்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றர். பள்ளி மாணவ, மாணவிகள் எம்பிக்கு விடுகதை போட்டு விடை கேட்டு ஆச்சரியபடுத்தினர். ஆய்வின் போது புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், சுப.சரவணன், பழனிவேல், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ரூபஸ் சாந்தகுமார், பள்ளி ஆசிரியை சத்யா, ஐடி விங்க் இதயம் அப்துல்லா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


    • குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.

    இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம் அரசு பள்ளியில் மேயும் கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதி கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து மேய விடுகின்றனர். கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    விளையாட்டு பயிற்சி, என்.சி.சி. பயிற்சி பெறும் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க கூடாது. கடும் வெப்பம் காரணமாக வகுப்பறை வெளியில் மரத்தடியில் கூட சில நேரம் வகுப்புகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு நடத்தப்படும் வகுப்புகளுக்கும் இடையூறாக இருப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    ×