என் மலர்

  நீங்கள் தேடியது "Perimeter"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன்.

  குமாரபாளையம்:

  குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தி கட்டி, மாணவியரின் சங்கடத்தை போக்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய நகர மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுப்பணித்துறை அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினார்.

  இதற்கு நாமக்கல் செயற்பொறியாளர் அருள் பதில் அனுப்பிய கடிதத்தில், இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணி செயலாக்கத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

  இது பற்றி சித்ரா கூறுகையில், மாணவியர்களின் நலன் காக்க இந்த புகார் அனுப்பினேன். இதனை சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து என்னை நிதி பெற்று தர சொல்வது, பொதுநல ஆர்வலர்களை இழிவு படுத்துவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுச்சுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.
  • திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்புறம் இருந்த சுற்றுசுவர் கஜா புயலில் சேதம் அடைந்தது.

  இதையடுத்து மாரிமுத்து எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் அமைக்க ஒதுக்கீடு செய்தார்.

  இதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.

  இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர்சுந்தர், வழக்கறிஞர் அருள்செல்வன், தாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  ×