search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி உயர்வு"

    • விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள குஜ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 20-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்று இரவே சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து 21-ந் தேதி காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

    இது சங்ரூர் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசைக் கண்டித்துள்ளன.

    • இசை அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது.
    • மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    மாஸ்கோ:

    ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

    இதனால் உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அந்த புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர்.

    இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.

    60 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

    இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

    ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
    • ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர்.

    நெல்லை:

    நெல்லையில் மழைக்கு நேற்று முன்தினம் வரை 12 பேர் பலியானார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லை டவுன் தாமிரபரணி ஆற்றங்கரையில் முதியவர் ஒருவர் இறந்தார். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளம் வடிந்த நிலையில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (61) என்பவர் மாவு அரைப்பதற்காக சுவிட்ச் போட முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் நெல்லையில் மழை பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 20 பேர் இறந்தனர். வெள்ளம் சூழ்ந்த தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் நேற்று ராஜகோபால் (61) என்பவர் இறந்து கிடந்தார்.

    இதேபோன்று தூத்துக்குடியில் மற்றொருவரும் பிணமாக மீட்கப்பட்டார். ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததில், ஒரு வீட்டில் வசித்த 3 பேர் இறந்தனர். அவர்களது உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.

    • நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

    தண்ணீர் வடிய தொடங்கிய நிலையில் உடல்கள் ஆங்காங்கே பிணமாக மிதந்தபடி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் மட்டும் 11 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் நெல்லை அருகே மானூர் காந்தீஸ்வரம் புதூரைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார்.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேரும், வீட்டு சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் பலியாகி உள்ளனர்.

    மழை வெள்ள சேதங்கள் குறித்து நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையர் பிரகாஷ் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளிதார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய ஆய்வு குழுவினர் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வின்படி பல்வேறு சேதாரங்கள் கணக்கிட்டு விவசாய நிலங்கள், மீனவ படகுகள் சேதாரங்கள், உயிர்பலி எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தொகுப்பாக தயார் செய்து அதன் மூலமாக இழப்பீடுகளை வாங்குவதற்கு உண்டான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொடர்ந்து 2 நாட்கள் இந்த ஆய்வு நடக்கிறது. குறைந்தபட்சம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி சேதாரம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் முழு சேதாரம், உயிர்பலி குறித்து தற்போது கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. முழு விவரங்கள் விரைவில் தெரியவரும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 40 இடங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. ராணுவம் என்.டி.ஆர்.எப் போன்ற பயிற்சி வாய்ந்தவர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. ஹெலிகாப்டர்கள் ஒரு நாளைக்கு தேவைக்கு தகுந்த மாதிரி அனுப்பப்படுகிறது. தற்போது 10 ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பப்பட்டு, அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை மீட்டு வருகிறோம். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பில் ஈடுபட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 கம்பெனி ராணுவ படையினர் வந்து உள்ளனர். தேவை ஏற்பட்டால் முழு ஆதரவு கொடுப்பதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எனவே, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்து உள்ளது.

    • விக்னேஷ் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • கண்ணன், ஆசிக் ஆகியோருடன் விக்னேஷ் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகன் விக்னேஷ்(வயது 17). இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    மின்கம்பத்தில் மோதல்

    நேற்று இரவு தனது உறவினரான லாரி டிரைவர் கண்ணன்(29), நண்பர் ஆசிக்(18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்செந்தூர் சாலையில் சத்யா நகர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேர் மீதும் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது.

    பலி

    இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசிக் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த கண்ணனுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×