search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் தாக்குதல்"

    • வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷித்துல்லா சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார்.
    • பாகிஸ்தான் ராணுவத்திற்கு துப்பு கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொன்றனர்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானில் அவ்வப்போது ஆப்கானிஸ்கானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து அவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தங்கள் இயக்கத்தை பற்றி பாகிஸ்தான் ராணுவத்திற்கு துப்பு கொடுத்ததாக வாலிபர் ஒருவரை ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தலையை துண்டித்து கொடூரமான முறையில் கொன்றனர். வடமேற்று கைபர் பார்கை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரஷித்துல்லா (வயது 17) சம்பத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார்.

    ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடினார்கள். ஆனால் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. இது பற்றி போலீசிலும் அவர்கள் புகார் கொடுத்தனர். இந்த சூழ்நிலையில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ரஷித்துல்லா தலை துண்டிக்கபட்டு பிணமாக கிடந்தார்.

    அவர் அருகே பயங்கரவாதிகள் எழுதிய துண்டு சீட்டும் கிடந்தது. அவர் பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கொடுத்து வந்தததால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    கம்பாலா:

    உகாண்டா நாட்டின் எல்லையில் உள்ள கிழக்கு காங்கோ பகுதியில் காசின்டி நகரில் ஸ்பாக் தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மீட்பு படையினருடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கிழக்கு காங்கோவின் பாதுகாப்பு அதிகாரியான அப்பல்லோ முவானம்போகா கூறும் போது, தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    உகாண்டாவின் பயங்கரவாத குழுவான நேச ஜனநாயக படைகளால் (ஏ.டி.எப்.) இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இதன் பின்னணியில் ஏ.டி.எப். குழு தான் ஈடுபட்டு இருக்கும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    ஆனாலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உகாண்டா ராணுவம் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

    • கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இதில் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை விமானம் மூலம் ஜம்முவிற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் தீபக் குமார், சதீஷ்குமார், பிரீத்தம் லால் மற்றும் சிவ் பால் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பாரதிய ஜனதா உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா குற்றம் சாட்டி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் இயல்பு நிலை பற்றிய பாரதிய ஜனதாவின் கூற்றுகள் இந்த சம்பவத்தால் அசைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலில் காஷ்மீரிலும், இப்போது ஜம்முவிலும் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க தவறிவிட்டனர்.

    பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் புதிய கட்சியான தி டெமாக்ரடிக் ஆசாத் கட்சியும், ரஜோரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அந்த கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறோம் என்றார்.

    தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜாவேத் ரானா, அப்னி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரி சவுத்ரி சுல்பிகர் உள்பட பல்வேறு கட்சிகளும் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரியில் உள்ள ஆஸ்பத்திரியின் முன்பு திரண்டிருந்த ஏராளமானோர் பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன கோஷங்களையும், யூனியன் ஆளுனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கிடையே பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    • சிரியா குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்தப் பகுதிகளை அமெரிக்க படைகளுடன் இணைந்து சிரியா மீட்டு வருகிறது.

    இந்நிலையில், அங்கு ராணுவ வீரர்களைக் குறிவைத்து, அவர்களது பஸ் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதல்களை ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் லட்சுமணன் உயிரிழந்தார்.
    • ராணுவ வீரர் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22). ராணுவ வீரரான இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர்.

    அப்போது இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    பயங்கரவாத தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது.அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

    ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களது சொந்த தோட்டத்தில் லட்சுமணன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    அங்கு லட்சுமணன் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் லட்சுமணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை ராணுவ வீரர் லட்சுமணின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    அவனியாபுரம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22). ராணுவவீரரான இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.

    நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு பயங்கரவாதிகளை சரணடையுமாறு எச்சரித்தனர். அப்போது இரு தரப்புக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    பயங்கரவாத தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை (13-ந் தேதி) தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை அவர்களது சொந்த தோட்டத்தில் ராணுவ வீரர் லட்சுமணின் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    • ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினார்கள்.
    • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலை படை பிரிவு தாக்குதலை நடத்தியது.

    ஜம்மு:

    இந்தியாவில் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளன.

    இதையொட்டி வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்லியிலும், மாநில தலைநகரங்களிலும் சுதந்திர தினத்தை மிக விமரிசையாக இந்த ஆண்டு கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    75-வது ஆண்டு சுதந்திர தினம் என்பதால் நாடுமுழுவதும் 75 இடங்களில் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சுதந்திர தினத்தை இந்தியா இப்படி எழுச்சியுடன் கொண்டாடுவது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

    எனவே இந்தியாவில் நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை உறுதி செய்த மத்திய உளவுத்துறை மிக உஷாராக இருக்கும்படி மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் விமான நிலையங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் முக்கிய நிலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காஷ்மீரில் தங்களது கைவரிசையை காட்ட பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று புத்காம் பகுதியில் நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். புல்வாமா சாலை சந்திப்பில் நேற்று இரவு 30 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதலை நடத்தினார்கள். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலை படை பிரிவு இந்த தாக்குதலை நடத்தியது.

    ரஜோரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2 பயங்கரவாதிகள் அந்த ராணுவ முகாம் பகுதிக்கு வந்தனர்.

    ராணுவ முகாமை தகர்க்கும் வகையில் 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகளும் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் நோக்கில் ஆக்ரோஷமாக தாக்கினார்கள்.

    இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.

    2 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்றவர்கள் ஆவார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலை தொடர்ந்து அங்கு கூடுதல் படை அனுப்பப்பட்டுள்ளது. கார்கில் போலீஸ் நிலையத்தில் இருந்து இந்த முகாம் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு கூடுதலான படைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. முகேஷ்சிங் தெரிவித்தார்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ராணுவ வீரர்களும், போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதல் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் சாதாரண மனிதர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து வேலைக்காகச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    தாக்குதல் நடத்துபவர்களை உள்ளூர் போலீஸ் உதவியுடன் பாதுகாப்புப்படையினர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த 5-ந்தேதி ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில்  இருந்த பாதுகாப்புப்படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று மாலை ஸ்ரீநகரில் உள்ள போஹ்ரி கதல் பகுதியில் சாதாரண மனிதர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஜம்மு-காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    லிபியா நாட்டின் திரிபோலி நகரில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
    திரிபோலி:

    அராபிய வசந்தம் புரட்சியின் விளைவாக கடந்த 2011-ம் ஆண்டில் புரட்சியாளர்களால் லிபியா நாட்டின் அதிபர் தாக்கி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அங்கு ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பதுபோல் பத்துக்கும் அதிகமான ஆயுதக் குழுக்கள் முளைக்க தொடங்கின.

    போதாக்குறைக்கு இஸ்லாமிய ஜிஹாதிகளின் ஆதிக்கமும் மேலோங்கி விட்டது. கூடுதலாக, சிரியா மற்றும் ஈராக்கில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் லிபியா நாட்டின் கடலோரப் பகுதி நகரமான சிர்டே என்னும் பெரிய ஊரை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தனர். அரசுப் படைகள் சுமார் 8 மாதங்கள் நடத்திய மூர்க்கத்தனமான போரில் இந்நகரம் மீட்கப்பட்டது.

    எண்ணெய் வளம் மிக்க லிபியாவில் உற்பத்தியாகும் பெட்ரோல் மூலம் கிடைக்கும் வருமானத்தை அந்தந்த பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் பயங்கரவாதிகளும், ஜிஹாதி போராளிகளும் அனுபவித்து வருகின்றனர். இந்த தொழிலில் யார் பெரியவன்? என்ற போட்டியால் இந்த குழுவினர் மோதிக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

    இந்த போட்டியில் கடந்த செப்டம்பர் மாதம் திரிபோலி நகரில் உள்ள பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தின் மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். பின்னர், அந்நாட்டின் தேர்தல் ஆணையர் அலுவலத்தின் மீது இவர்கள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.



    இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக கட்டிடத்தின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

    முதலில் கட்டிடத்தின் வாசலில் ஒரு கார் குண்டு வெடித்தது. வாசலில் காவலுக்கு இருந்த பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தபோது கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு சூட்கேஸ் குண்டு வெடித்து சிதறியது. பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. #Libyaforeignministry #LibyaforeignministryAttack
    ஜம்மி-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள இரு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறலாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். #Pakistanitroopsviolates #pakistanborder
    ஸ்ரீநகர்:

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    மழைக்காலத்தை சாதகமாக்கி பயன்படுத்திகொண்டு பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் தயாராக காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்து தாக்குதல்களை நடத்தும் திட்டத்துக்கும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது. அதற்கான உகந்த நேரத்துக்காக பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், பூகுப்வாரா மாவட்டத்தில் உள்ள இரு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறலாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இன்று காலை தங்டார் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக துப்பாக்கிகளால் சுட்டனர். 

    இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டு தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையில் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    இதேபோல், இங்குள்ள கர்னாஹ் எல்லைக்கோட்டுப் பகுதியிலும் பாகிஸ்தான் படைகள் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ராணுவ வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. #Pakistanitroopsviolates #pakistanborder
    ஆப்கானிஸ்தான், கந்தஹார் பகுதியில் இந்தியாவுக்கு சமையல் எரிவாயு கொண்டுவரும் குழாய் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். #AfghanTalibanAttack
    காபுல்:

    துருக்மேனிஸ்தான் நாட்டில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வருவதற்காக, சுமார் 1800 கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கண்ட நாடுகளின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 800 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டப்பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணத்தில் உள்ள மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பாதையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பகுதியில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த பயங்கரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் 5 தொழிலாளர்களை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர்.

    ஒரு தொழிலாளியை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    ×