search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் தாக்குதல்"

    • அதிகாலை 3 மணிக்கு கையெறி குண்டுகள், துப்பாக்கியால் தாக்குதல்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள உள்ளது டெரா இஸ்மாயில் கான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இநத் தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 காயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் கடுமையான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காவல் நிலையத்தை சுற்றி வளைத்து கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர்.

    போலீஸ் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கான அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் மட்டும் 93 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 90 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 135 பேர் காயம் அடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 15 தனிநபர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

    தேர்தல் அலுவலக கட்டிடம் மீது கையெறி குண்டு வீச்சு: 6 பேர் படுகாயம்

    பாகிஸ்தானில் வருகிற 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சில நாட்களாக அந்த நாட்டில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும், குண்டு வெடிப்புகளும் நடந்து வருவது பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பலுசிஸ்தான் மாகாணம் கலாட் நகர் முசுல் சராட் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலக கட்டிடத்தை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசி விட்டு தப்பினார்கள்.

    இந்த குண்டு அலுவலக கட்டிடம் அருகே விழுந்து வெடித்தது. இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 6 தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். வெடித்த குண்டு எந்த வகையை சேர்ந்தது என்று தெரியவில்லை. அதனை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வீசிய மர்ம மனிதர்களை தேடிவருகின்றனர்.

    தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பாகிஸ்தான் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

    தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் கெச் மாவட்டத்தின் புலேடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பயன்படுத்தி ராணுவ வாகனத்தை வெடிக்க செய்தனர். இதில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கடன் வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது
    • தற்கொலை படை தாக்குதல்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர்

    அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் வருட தொடக்கத்திலேயே, ஒரு டாலருக்கு பாகிஸ்தானிய ரூபாய் 300 எனும் அளவிற்கு அந்நாட்டு கரன்சி மதிப்பிழந்தது.

    சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க பல நிபந்தனைகளை விதித்தது. அவற்றை ஏற்கும் சூழலால் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்கள். பெட்ரோல் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கடுமையான விலையேற்றத்தை சந்தித்தது. நாடு முழுவதும் பல மணி நேரங்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவித்தனர். நிலைமையை சமாளிக்க அரசு இலவசமாக மாவு வழங்கியது. இதனை பெற ஏற்பட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக பரிசு பொருட்களை விற்றதாக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


    ஆப்கானிஸ்தானிலிருந்து வந்து பாகிஸ்தானில் தங்கியிருந்த லட்சக்கணக்கான அகதிகளை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே உறவு நலிவடைந்தது.

    ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    மொத்தத்தில், தொடக்கம் முதலே 2023 பாகிஸ்தானுக்கு சிறப்பானதாக இல்லை.

    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் கண்ட்முல்லா பகுதியில் உள்ள மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் முன்னாள் போலீஸ் அதிகாரி முகமது ஷபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

    சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலியாகினர்.

    • நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
    • கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

    அபுஜா:

    நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நட்த்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்ற னர்.

    பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.

    இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டியது. தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர்.

    நியாமி:

    ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஜூலை மாதம் அதிபர் முகமது பாசும் சிறைபிடிக்கப்பட்டார். அதுமுதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்டை நாடான மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 29 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாக நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    நைஜர்:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய போராட்டக்குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில சமயம் பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு ஈவு இரக்கம் இல்லாமல் அவர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தநாட்டின் வடக்கு காவ் பாம்பாவில் உள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள், அதே போல நைஜர் ஆற்றில் திக்புகுடு பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகினை குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதலில் 49 பொதுமக்கள் மற்றும் 15 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    • எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்
    • 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பி னர் அரசுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் உகாண்டா நாட்டை சேர்ந்த அமைதி படையும் சோமாலியாவில் தீவிர வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் உள்ள புலமாரரில் உள்ள பாதுகாப்பு படை தளத்தை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி கூறும்போது, சோமாலியாவில் உள்ள ராணுவ தளத்தில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்தனர். எங்களது வீரர்கள் கடுமையாக போராடி ராணுவ தளத்தை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றனர்.

    இதற்கிடையே ராணுவ தளத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், 137 வீரர்களை கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

    • பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
    • காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியை போலீசார், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூன்று வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கூடுதல் போலீசார் ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டனர்.
    • போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போலீசார் பலியானார்கள்.

    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் லக்கி மார்வாட் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அங்கு குறைவான போலீசாரே இருந்தனர்.

    இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கூடுதல் போலீசார் ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டனர். அப்போது அங்கு போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போலீசார் பலியானார்கள். போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர்.

    தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி அஷ்பக்கான் தெரிவித்தார்.

    இந்த இரண்டு தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து பாகிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • இதில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

    பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கோவின் கிழக்கில் உள்ள இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த டிரைவர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    • பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    • சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் தாடிவாலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள லக்கி மர்வாட் என்ற இடத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் அப்பாஸ் போலீஸ் சோதனைச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டி வருவதாகவும், பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து உள்ளூர் போலீசாருடன் பயங்கரவாத தடுப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அவர்களைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விசாரணையில், அவர்கள் போலீசார் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

    ×