என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவில் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி- அண்ணாமலை
- டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
- எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும்.
கோவை:
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவையில் வருகிற 19-ந் தேதி தென்னிந்திய இயற்கை விவசாய சம்மேளம் சார்பில் இயற்கை விவசாய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகிற 19-ந்தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகிறார்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 5 ஆயிரம் இளம் இயற்கை விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தென்னிந்தியாவில் பணிபுரியும் 50 இயற்கை விஞ்ஞானிகளை சந்தித்து பேசுகிறார். நாட்டு மாடுகளை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் விவசாய நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்கிறார். வேறு எந்த கட்சி நிகழ்ச்சிகளும் கிடையாது.
மருத்துவர்கள் பயங்கரவாதிகளாக செயல்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் இந்திய பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் குஜராத்தில் உள்ள டாக்டர்கள் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், அவர்கள் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் ரசாயனம் கலந்து பலரை கொல்வதற்கும் சதி திட்டம் தீட்டியுள்ளனர். டாக்டர்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், மருத்துவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபட வைத்துள்ளனர்.
மும்பையில் நடந்தது போன்று டெல்லியில் நடத்த வேண்டும் என்பதற்காக இதை செய்தோம் என தெரிவித்துள்ளனர். எல்லா அரசியல் கட்சியினரும் ஒன்றாக இணைந்து இதனை வேரில் இருந்து பிடுங்கி எறிய வேண்டும் என்றார்.






