search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிப்பொழிவு"

    • பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
    • கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

    இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.

    அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.

    திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

    சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.

    இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.

    தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.

    • ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
    • தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாகவும், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் முகூர்த்த சீசனில் குறைந்த பரப்பில் சாகுபடியாகிறது.முக்கோணம், பாப்பனூத்து, புங்கமுத்தூர், ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.

    தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பூக்கள் கிடைக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.தும்பலபட்டியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வரும் முருகேசன் கூறியதாவது:-

    கடந்த 7 ஆண்டுகளாக கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பகுதியில் நாற்றுகள் கிடைப்பதில்லை. எனவே ஓசூர் சென்று நாற்று வாங்கி வந்து நடவு செய்தேன். ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் வரை பிடிக்கும். நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்யலாம்.தொடந்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பூக்கள் கிடைக்கும். சாகுபடியில் களைச்செடிகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது. மக்காச்சோளம், உளுந்து பயிர் சாகுபடியில் களைக்கொல்லி தெளித்து கட்டு ப்படுத்துகின்றனர். ஆனால் இச்சாகுபடியில் மருந்து தெளிக்க முடியாது என்பதால் தொழிலாளர்களை கொண்டு களை பறிக்க வேண்டியுள்ளது.

    இதற்கு அதிக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை, மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 - 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் விலை கிடைக்காது.

    தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கருகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில் தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.குறித்த நேரத்தில் பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் உடுமலை பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று இரவு கடுமையான பனிபொழிவு இருந்த நிலையில் அது இன்று காலை வரை நீடித்தது. அதிகாலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல தயாரான பொதுமக்கள் சிரமப்பட்டனர்.அரசு பஸ்களில் டிரைவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனம் ஒட்டி சென்றனர். எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

    வயல்வெளி பகுதி களிலும் பனிபடர்ந்து இருந்தது. தேரூர், அரும நல்லூர், பூதப்பாண்டி, சுசீந்திரம், பொற்றையடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் காற்று வீசியது. அதிகாலையில் பனிபொழிவு ஒருபுறம் இருக்க மதியம் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சளி தொல்லை அதிகமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட புறநோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    • பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
    • வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.

    கடலூர்:

    மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் வெயில், இரவு குளிர்ந்த காற்று மற்றும் அவ்வப்போது மழை என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணி வரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மார்கழி மாதம் முடிந்து 2 வாரம் ஆன நிலையில் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு, திருவந்திபுரம், வெல்லப்பாக்கம், நத்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது இந்த கடும் பனி பொழிவு காலை 7 மணி வரை படர்ந்து காணப்பட்டது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்பட்டது. மேலும் காலை நேரங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது. 

    மேலும் ெரயில், பஸ், லாரி, கார் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 7 மணி வரை முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.

    • வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர்.
    • திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    அவிநாசி :

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்க ழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. ஆனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான அவினாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் கடந்த ஆண்டுகளை விட வழக்கத்திற்கு மாறாக குளிரும், பனிப்பொழிவும் மிக அதிகமாக உள்ளது.

    தினமும் மாலை 6 மணிக்கே ஒரு குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுவதுடன், காலை 8 மணி வரை கடுங்குளிர் நிலவுகிறது. இதேபோல் பனிப்பொழிவும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அளவுக்கு அ திகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர். கடந்த சிலநாட்களாக வீடுகளில் இரவில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் கூட அதிக குளிர், பனி காரணமாக காலையில் தாமதமாக எழும்பும் சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் குளிரும், பனியும் இருப்பதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.
    • இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

    சிம்லா:

    டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

    பனி மூட்டமும் அதிகமாக இருப்பதால் டெல்லி செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் கடும் பனி நிலவி வருகிறது. ரோடுகளில் பனி மூடிக் கிடக்கிறது.

    இதையடுத்து அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. மின் வினியோகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
    • செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.


    திருவனந்தபுரம்:

    கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறிலும் கடந்த சில நாட்களாக குளிர்வாட்டி வதைக்கிறது. நேற்று மூணாறின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே இருந்தது.

    இப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.

    • நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.
    • காலை 8 மணிக்கு பிறகு பனிப்பொழிவு கடுமையாக காணப்பட்டது.

    தருமபுரி,

    தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, இரண்டு வாரமாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், தருமபுரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனிப் பொழிவும் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, ஒட்டப்பட்டி, தேவரசம்பட்டி, கலெக்டர் இல்லம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வரும் ஆனால் இன்று விடியற்காலை 7 மணி வரை பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது.

    திடீரென வழக்கத்திற்கு மாறாக காலை 8 மணிக்கு பிறகு பனிப்பொழிவு கடுமையாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். கடுமையான குளிரும் வீசியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிகாலை நேரத்தில் எழுந்து கால்நடைகளை பராமரிப்பது, விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    காலை நேரங்களில் வாலி–பர் முதல் முதியோர் வரை நடைபயிற்சி மேற்கொள்வோர் நடைபயிற்சி மேற்–கொள்ள முடியாத சூழ்–நிலை ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள், வீதிகளில் காய்கறி கீரை விற்பனை செய்வோர் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் வழக்கமான போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

     இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகள் கருகி சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது.
    • நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி, இமாச்சலபிரதேச மாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. அதிகாலை நேரங்களில் கிராமங்கள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது.

    சாலைகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கிறது. அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    டெல்லியில் நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலை வருகிற 11-ந்தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

    டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, தற்போது வரை எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.

    அதே நேரம் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து பயணிகள் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

    • திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அணைகள், குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை மூடு பனி காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே நடைபயிற்சி செய்து வருகின்றனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.
    • காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. அதிகாலை போலவே தோற்றம் அளித்தது.

    தருமபுரி,

    தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும்.

    கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான பனிபொழிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொடர் மழை இருந்து வந்தது. தற்போது, கடந்த ஒரு வாரமாக மழை பொழியவில்லை. தொடர்ந்து மழை நின்றதால், தருமபுரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் பனி பொழிவும் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள, தருமபுரி, ஒட்டப்பட்டி, தேவரசமாபட்டி, கலெக்டர் இல்லம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.

    காலை 9 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை. அதிகாலை போலவே தோற்றம் அளித்தது.

    இன்று காலை சாலையில் எதிரே வரும் ஆட்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிந்தவாறு சென்றன.

    இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    ×