search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்- டெல்லியில் இன்று மூடுபனியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்- டெல்லியில் இன்று மூடுபனியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது.
    • நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி, இமாச்சலபிரதேச மாநிலங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. அதிகாலை நேரங்களில் கிராமங்கள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது.

    சாலைகளிலும் பனிமூட்டம் காணப்படுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கிறது. அனைத்து வாகனங்களும் மெதுவாக செல்வதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    டெல்லியில் நேற்று 7 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை இன்று அதிகாலை 5 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த நிலை வருகிற 11-ந்தேதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

    டெல்லியில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்படுவது தாமதம் ஆவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, தற்போது வரை எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.

    அதே நேரம் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்து பயணிகள் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்து உள்ளது.

    Next Story
    ×