search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home lighting"

    • செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
    • இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது.

    விழுப்புரம்:

    மழை பெய்ய வேண்டிய இந்த சமயத்தில் செஞ்சி பகுதியில் நேற்று திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டி சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 7மணி வரை நீடித்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் பனிமூட்டம் இருக்கும். தற்போது மழை காலம். எனேவ பனிமூட்டம் இருப்பது இல்லை. இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது. அது போல் இயற்கையும் மாறுகிறது என்றார்.

    • பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
    • வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.

    கடலூர்:

    மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் வெயில், இரவு குளிர்ந்த காற்று மற்றும் அவ்வப்போது மழை என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணி வரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மார்கழி மாதம் முடிந்து 2 வாரம் ஆன நிலையில் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு, திருவந்திபுரம், வெல்லப்பாக்கம், நத்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது இந்த கடும் பனி பொழிவு காலை 7 மணி வரை படர்ந்து காணப்பட்டது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்பட்டது. மேலும் காலை நேரங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது. 

    மேலும் ெரயில், பஸ், லாரி, கார் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 7 மணி வரை முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.

    ×