search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி பலி"

    • எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது.
    • கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 51), கூலி தொழிலாளி. இவர் வடிவீஸ்வரம் பகுதியில் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை அருகே உள்ள கோணேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (55), தொழிலாளியான இவர் கடந்த 11-ந் தேதி இரவு இளம்பிள்ளையில் இருந்து சின்னப்பம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சின்னப்பம் பட்டியில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பஸ் தங்கவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் கார்த்திக்கேயன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்க லம் அருகே உள்ள அர்ஜூன காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.

    திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாலாஜி மனைவியுடன் விஜயமங்கலத்தில் தங்கி இருந்தார்.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 2 வருடமாக வீட்டுக்கு வராமல் விஜயமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் குப்பை எடுத்து வரும் வேலை பார்த்து கொண்டு அங்கேயே தங்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் பாலாஜி நேற்று தீபாவளி அன்று காலை ஒரு டீக்கடை அருகே இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. அவரது இடது காது மற்றும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. அவரது உடல் அருகே பட்டாசு வெடித்து சிதறி கிடந்தன. இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பாலாஜி மது போதையில் அணுகுண்டு வெடியை வெடித்துள்ளார். அப்போது வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கருப்பன் மகன் ராஜ்குமார்(45). இவர் நெல்கதிர் அறுக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று இரவு பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது.
    • சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சின்ன ரங்கன் என்கிற சென்டான் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    சென்டான் எப்போதும் அதே பகுதியில் தர்மன் என்பவர் தோட்டத்தில் பால் கறக்க செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தர்மன் என்பவரின் தோட்டத்திற்கு பால் கறக்க சைக்கிளில் சென்டான் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது. இதில் பலத்த அடிப்பட்டு உயிருக்காக சென்டான் போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது மகள் வந்து பார்த்தார்.

    அப்பொழுது தந்தை நிலையை கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் கார் மூலம் சென்டானை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சென்டான் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    ஆயில் ஏற்றிச்செல்லும் எம்.சி.பாட்ரியாட் என்னும் சரக்கு கப்பல் கடந்த மாதம் ஒடிசா மாநில துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் பழுது ஏற்பட்டதை தொடந்து கடந்த மாதம் 31-ந்தேதி சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    தனியார் நிறுவனம் மூலம் கப்பலில் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த சகாய தங்கராஜ் (வயது 45) உள்பட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கப்பலில் இருந்த போல்டை கியாஸ் கட்டர் மூலம் சகாயராஜ் மற்றும் தொழிலாளர்கள் அகற்றினர். அப்போது அருகில் இருந்த கியாஸ் பைப்லைன் மீது பட்டு வெடித்தது.

    இதில் ஊழியர் சகாய தங்கராஜ் உடல் கருகி பலியானார். மேலும் அருகில் இருந்த காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா (24), தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ்(35), ஜீவரத்தினம் நகரை சேர்ந்த புஷ்பலிங்கம் (48) ஆகிய 3 பேரும் உடல் கருகினர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பலத்த தீக்காயம் அடைந்த ஜோஸ்வா உள்பட 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    இதனிடையே நேற்றிரவும் பலத்த மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு பல சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    மேட்டுப்பாளையம் காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது63). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதிகளில் உள்ள கடையோரங்களில் இரவில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்றிரவு அங்கு புதுப்பித்து கட்டப்பட்டு வரும் ஒரு கடையின் அருகே படுத்து தூங்கினார்.

    நேற்றிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், புதுப்பிக்கப்பட்டு வரும் கடையின் சுவர் மற்றும் மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் கடையின் கீழே படுத்திருந்த பழனிசாமி சிக்கி கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இடிபாடுகளை அகற்றி, இறந்த பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு கடையின் சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறியபோது பறிதாபம்
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக் கர்கேட்டா(22), திருமணமானவர்.இவர் ராணிப்பேட்டை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    அசோக் கர்கேட்டா தொழிற்சாலையின் மேலே புறாக்கள் இருப்பதைக் பார்த்து அடிக்கடி மேலே சென்று புறாக்களை பிடித்து வந்துள்ளார்.

    நேற்று காலையிலும் புறா பிடிப்பதற்காக சுவர் மீது ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த போலீசார் அசோக் கர்கேட்டா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் தொழிலாளி வந்த பைக் மீது மோதியது.
    • இதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொன்னம்பட்டியை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது20). செண்ட்ரிங் தொழிலாளியான இவர் பெரியகுளம் சத்தியாநகரில் உள்ள வீட்டில் வேலை பார்க்க சென்றார். வேலை முடிந்து பின்னர் பைக்கில் ஊர் திரும்பிக்கொ ண்டிருந்தார்.

    தேனி- திண்டுக்கல் பைபாஸ் சாலையில் காட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரோகித்குமார் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே எரசிங்கபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் செல்வராஜ் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் தொழிலாளி தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர்.
    • அடையாள தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் சிதம்பரனார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இன்று காலை ஒருவர் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தீயணைப்பு த்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த தீயணைப்புத்து றையினர் கால்வாயில் விழுந்தவரை மேலே தூக்கியபோது அவர் இறந்துகிடந்தார். பின்னர் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல் நகரில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் அவர் தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
    • குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மேலத்துறை பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் ஜெகன். இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது படகில் குமரி மாவட்ட தொழிலாளர்கள் 8 பேர், ஒடிசாவை சேர்ந்த 5 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 20 தொழிலாளர்கள் வழக்கம்போல் வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் நேற்று கன்னியாகுமாரி கடற்பகுதியிலிருந்து 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒடிசா தொழிலாளி திபாகர மாலிக் (வயது 64) கடலில் போட்டிருந்த ஆங்கரை மேலே எடுக்க முயற்சித்தார். அப்போது ஆங்கர் கயிறு வேகமாக சுழன்றதில் கயிறு திபாகர மாலிக் தலை மற்றும் முகத்தில் அடித்தது. இதில் அவர் மயங்கி விசைப்படகுக்குள் விழுந்தார்.

    அருகில் நின்ற ராமநாதபுரம் தொழிலாளி செய்யது நவாஸ் (36) என்பவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் விசைப்படகை சின்ன முட்டம் துறைமுகத்திற்கு செலுத்தி திபாகர மாலிக்கை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திபாகர மாலிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசில் விசைப்படகு ஓட்டுனர் ஜஸ்டின் புகார் செய்தார். அதன்பேரில் மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார். பலியான திபாகர மாலிக்கிற்கு திருமணமாகி 2 மகன்களும்,1 மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரை

    கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கல் நீரோடை பகுதியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருகிறது. அங்கு கொல்கத்தா கன்குறியா பகுதியைச் சேர்ந்த இஜாபுல் மகன் ரூபல் (22) என்பவர் கண்ணன் (எ) முத்து கிருஷ்ணன் ஒப்பந்தக்காரரிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

    அப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கட்டிடத்திலிருந்து கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில கட்டிட தொழிலாளி ரூபல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இது குறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரிடம் கட்டிட ஊழியர்கள் புகார் அளித்திருந்தும் அலட்சியம் காட்டியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது என்று வெளி மாநில தொழி லாளர்கள் கூறினர்.

    மேலும் இதே போல் சென்ற மாதம் 17-ந்தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார் (23) என்ற தொழிலாளர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

    ×