கோட்டாரில் லாரியில் இருந்து சாக்கு மூடை தவறி விழுந்து தொழிலாளி பலி

எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது.கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோட்டாரில் லாரியில் இருந்து சாக்கு மூடை தவறி விழுந்து தொழிலாளி பலி
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 51), கூலி தொழிலாளி. இவர் வடிவீஸ்வரம் பகுதியில் லாரிகளில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூட்டை ஒன்று தவறி மாடசாமி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com