திண்டுக்கல்லில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து தொழிலாளி பலி

இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் தொழிலாளி தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர்.அடையாள தெரியாத நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கால்வாயில் இறந்து கிடந்தவர்.
கால்வாயில் இறந்து கிடந்தவர்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் சிதம்பரனார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இன்று காலை ஒருவர் விழுந்து கிடந்தார். இதுகுறித்து தீயணைப்பு த்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் அங்கு வந்த தீயணைப்புத்து றையினர் கால்வாயில் விழுந்தவரை மேலே தூக்கியபோது அவர் இறந்துகிடந்தார். பின்னர் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் நகரில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில் வாய்க்காலில் அவர் தவறிவிழுந்திருக்கலாம் என்று போலீசார் தெரி வித்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com