என் மலர்
நீங்கள் தேடியது "Worker sacrifice"
- கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி.
- இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்னதானப்பட்டிக்கு சென்றார்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்ன தானப்பட்டிக்கு சென்றார். அப்போது அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, பழைய பஸ் நிலையத்தில் இருந்து மகுடஞ்சாவடி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராத விதமாக சீனிவாசன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சீனிவாசன் பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வலையப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்தார்.
- மோட்டாரின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரண மாக ராஜூ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துபோனார்.
பரமத்தி வேலூர்:
ஆந்திரா மாநிலம் குறுகொண்டாவாரி பேட்டா அருகே போத்தாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 55 ). இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வலையப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேங்காய் குடோனில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தேங்காய் குடோனில் வேலை முடித்துவிட்டு, குளிப்பதற்காக மின் மோட்டாரை போட்டபோது தண்ணீர் வரவில்லை.
இதையடுத்து அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து தட்ட முயன்றபோது, மோட்டாரின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரண மாக ராஜூ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துபோனார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டால்மியா போர்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற, ரோட்டை கடக்க முயன்றார்.
- அப்போது சேலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி சென்ற அரசு பஸ், வெங்கடாசலம் மீது மோதியது.
சேலம்:
சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி தாழம்பூ நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). இவர் கடந்த 20-ந் தேதி மாலை சுமார் 4.30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக டால்மியா போர்டு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற, ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி சென்ற அரசு பஸ், வெங்கடாசலம் மீது மோதியது.
இதில் தூக்கி விசப்பட்ட அவர், படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடாசலத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் இறந்து விட்டார். இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார்ைசக்கிள் மீது மோதியது.
- இதில் அருள்செல்வன் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் -கோவை புறவழிச்சாலை எஸ்.எஸ்.எம் கல்லூரி எதிரில் ஓட்டல் வைத்து தொழில் செய்து வந்தவர் அருள்செல்வன், (வயது 48). இவர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஆனங்கூர் சாலை காவடியான்காடு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார்ைசக்கிள் மீது மோதியது. இதில் அருள்செல்வன் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அருள்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் கார் டிரைவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த ஸ்ரீகாந்த், (29) என்பவரை கைது செய்தனர்.
- சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மாலையிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி வாமா. இவர்களுக்கு சுமையா என்ற மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று அலாவுதீன் அய்யாவாடி கூட்டு சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற கார் அலாவுதீன் மீது மோதியது.
இதில் அலாவுதீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரநை்து வந்த வந்தவாசி வடக்கு போலீசார் அலாவுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
- வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரிய மணலி பகுதியில் கோட்டம்பட்டி பிரிவு சாலையில் வலது புறமாக திரும்பியபோது வேலகவுண்டம்பட்டியில் இருந்து பெரியமணலி நோக்கி அதிவேகமாக வந்த கார், செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் அவர் படுகாயம்
அடைந்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று செல்வ ராஜ் உயிரிழந்தார். விபத்து குறித்து வேலக
வுண்டம்பட்டி போலீசில்
புகார் செய்தனர். அதன்பே ரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன் (49) என்பவரை கைது செய்து, காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.
- அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்( வயது 32) கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் பல்லடம் மங்கலம் சாலையில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.
அங்கு இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அங்கு எந்திரம் மூலம் குழி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன முத்துக்குமாருக்கு மைதிலி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
- மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
- எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள திட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் மணி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு காந்திமதி என்கிற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் மணி காலைக் கடனை கழிப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வந்த ரெயில், மணி மீது மோதியது. இதில் ரெயிலில் சிக்கிய மணி, அரை கிலோ மீட்டர் இழுத்து செல்லப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் நகர போலீசார் விரைந்து வந்து மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50) தச்சு தொழிலாளி. இவர் நேற்று இரவு கொண்டலாம்பட்டியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கொண்டலாம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரோட்டை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கண்ணடிகுப்பம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் மாயன் (வயது 50).கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு மின்னூர் மின்வாரிய அலுவலகம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாயன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட மாயன் சம்பவம் இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மாயன் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
- கொய்யா பறிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிகுப்பம் கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது55). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நடேசன் நேற்று கத்தாரிகுப்பம் அருகே அம்மனூர் கிராமத்தில் கொய்யா தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார்.
அப்போது, தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டாருக்கு செல்லும் ஒயரை மிதித்து உள்ளார்.
அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து நடேசன் தூக்கி வீசப்பட்டார். மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளி அவரது வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விரைந்து வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்துக்கு சென்ற போலீசார் நடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நடேசன் மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50) கூலித்தொழிலாளி.
இவர் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பன்னீர் செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்கை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






