என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.
- அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்( வயது 32) கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் பல்லடம் மங்கலம் சாலையில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் கட்டட வேலைகள் நடைபெற்று வருகிறது.
அங்கு இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அங்கு எந்திரம் மூலம் குழி எடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன முத்துக்குமாருக்கு மைதிலி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.






