என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னதானப்பட்டியில் அரசு டவுன் பஸ் மோதி கூலித் தொழிலாளி பலி
- கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி.
- இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்னதானப்பட்டிக்கு சென்றார்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 43), கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் அன்ன தானப்பட்டிக்கு சென்றார். அப்போது அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது, பழைய பஸ் நிலையத்தில் இருந்து மகுடஞ்சாவடி நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராத விதமாக சீனிவாசன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சீனிவாசன் பரிதாபமாக இருந்தார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






