திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

தொழிலாளி ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான ராஜ்குமார்.
விபத்தில் பலியான ராஜ்குமார்.
Published on

திண்டுக்கல்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கருப்பன் மகன் ராஜ்குமார்(45). இவர் நெல்கதிர் அறுக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று இரவு பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com