search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி சாவு"

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் அண்ணா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), பீடி சுற்றும் கூலி தொழிலாளி. நேற்று இரவு ஆற்காடு, மேல்விஷாரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அந்த நேரத்தில் சுப்பிரமணி கீழ்விஷாரம் மாரியம்மன் கோவில் அருகே சைக் கிளில் சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து சுப்பிர மணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கழிவுநீர் கால் வாயில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல்விஷா ரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் மழை யையும் பொருட்படுத்தாமல் கீழ்விஷாரம் அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நிலக்கரி கொதிகலனில் இருந்து சாம்பலை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஒடிசா மாநிலம் பாலாண்டி மாவட்டம், ஜம்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜராஜடங்கு (38). கூலித்தொழிலாளி. இவரது நண்பரும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவருமான அபலடநாடா (22).

    இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள தனியார் பேப்பர் மில்லில் வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் மில்லில் உள்ள அறையில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி கஜராஜடங்கு மில்லில் உள்ள நிலக்கரி கொதிகலனில் இருந்து சாம்பலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்–போது எதிர்பாராதவித மாக நிலக்கரி கொதிகலனில் உள்ள அனல் காற்று வெளியேற்றும் பேன் கஜராஜடங்கு மீது விழுந்தது. இதில் தீக்காயம் அடைந்த அவரை, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் அனுமதிக்கப்–பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக, பெங்களூரு–வில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்–பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அபலடநாடா சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • இரும்பு கைப்பிடியை பிடித்துக் தொங்கியபோது விபரீதம்

    வேலூர்:

    வேலூர், கன்சால்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் பில்லா. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் செட்டில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    ஆகாஷ் நேற்று மாலை தனது நண்பர்களுடன் பாலாற்றில் உள்ள ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றார்.

    ரெயில்வே பாலத்தில் இருந்த இரும்பு கைப்பிடியை ஆகாஷ் பிடித்துக் கொண்டு தொங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தது.

    இதனால் ஆகாஷ் 20 அடி உயரத்தில் இருந்து பாலாற்றில் விழுந்தார். அவர் மீது இரும்பு கைப்பிடி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

    அவருடன் சென்ற நண்பர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
    • லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (வயது 52). இவர் நேற்று இரவு அண்ணா மலைப்பட்டி கிராமத்திற்கு சென்று பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது மொரப்பூரை நோக்கி உருளை கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது சாய்ந்தது. இதில் லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் அடிப்பக்கம் சிக்கிய உடலை கிரேன் உதவியுடன் மீட்டு உடலை பிரேத பரி சோதனைக்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஊராட்சி சார்பில் பேவர் பிளாக் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பேவர் பிளக் கற்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கற்களை அங்கிருந்து முருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி உள்ளனர். டிராக்டரை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார்.

    கற்களை ஏற்றி கொண்டு வெளியே வரும் போது கோவில் தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூண் கீழே படுத்துக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி கந்தசாமி (45) என்பவர் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக கந்தசாமியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.

    • விவசாயி கைது
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அடியத்தூர், தாயப்பன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சாமுடி மகன் ராகுல் (வயது 22).

    கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த மையா என்கிற மகேந்திரன் (61) என்பவர் விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட் டிரான்ஸ்பார்மரில் பழுதைசரிசெய்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

    இதைக் கண்ட மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த ராகுலின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் வீட்டில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது குறித்து ராகுலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்த னர். அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த பகவந்தபுரத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது 35).கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது விஜயன் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமாறாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது.
    • தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் சுண்டகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது40). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று தனது மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து மொ ரப்பூர் அருகே உள்ள எம். வெள்ளாளப் பட்டியைச் சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிட வேலைக்கு சென்றனர்.

    அப்போது தென்னரசு கட்டிடத்திற்காக மரபல கையை கட்டிங் மிஷின் மூலம் அறுத்து கொண்டி ருந்தார்.

    அப்போது அந்த மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமா றாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தென்னரசுவின் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

    இதனை கண்ட உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் பதறினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

    அங்கு தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து தென்னரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத் தனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது.
    • விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது. விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த சேட்டுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

    இந்த விபத்து சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
    • இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியகொடிவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமேரி (வயது 71). இவரது மகன் சேவியர் (49). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சேவியர் வழக்கம் போல் நல்ல கவு ண்டன் பாளையம் மலர் நக ரில் புதிதாக கட்டி வரும் ஒரு கட்டிடத்திற்கு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று ள்ளார்.

    அங்கு சேவியர் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது மேல்தளத்திற்கு செல்வதற்காக படியில் ஏறினார். அப்போது எதிர்பா ராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிரு ந்தவர்கள் சேவியரை கோபி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மரு த்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சேவியர் சிகிச்சை பலனி ன்றி உயிரிழந்தார். இதைய டுத்து சேவியரின் தாய் செ ல்வமேரி இது குறித்து கோபி போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது40). தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக குமார் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த மாதம் 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார்.
    • வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள காக்காபாளையம் கணக்கர் காலனி பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 53). பெயிண்டர். இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் தங்கி இருந்து பெயிண்ட் அடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வேலு தான் வேலை செய்யும் வீட்டின் முதல் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×