என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலாற்று ெரயில்வே பாலத்தில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி சாவு
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- இரும்பு கைப்பிடியை பிடித்துக் தொங்கியபோது விபரீதம்
வேலூர்:
வேலூர், கன்சால்பேட்டை, இந்திரா நகரை சேர்ந்தவர் பில்லா. இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் செட்டில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.
ஆகாஷ் நேற்று மாலை தனது நண்பர்களுடன் பாலாற்றில் உள்ள ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றார்.
ரெயில்வே பாலத்தில் இருந்த இரும்பு கைப்பிடியை ஆகாஷ் பிடித்துக் கொண்டு தொங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கைப்பிடி உடைந்தது.
இதனால் ஆகாஷ் 20 அடி உயரத்தில் இருந்து பாலாற்றில் விழுந்தார். அவர் மீது இரும்பு கைப்பிடி விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
அவருடன் சென்ற நண்பர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






