search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வு"

    • அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.
    • உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனிநபர் பிரிவில் 120 பேரும் குழுபிரிவில் 316 பேரும் தேர்வாகியுள்ளனர். அதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    குறிப்பாக காற்றுக்கருவி - இஜிரா (அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி), ஓவியம் - ஸ்ரீசபரிஆகாஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்), இயற்கை காட்சி வரைதல் -- ஸ்ரீகிருஷ்ணாகுமார், ரூபன் (அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம்) ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

    • இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
    • உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது.

    கோவை,

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

    இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    கோவையில் 427 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து, இதில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

    இதனை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்த உடற்தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடைபெற உள்ளது. 

    • இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

    திருச்சி

    திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் தற்போது 51 ஆண் மற்றும் 5 பெண் என மொத்தம் 56 ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 20 வயது முதல் 45 வயதுடையவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியுடையவர்கள் திருச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறிப்பாக எந்த ஒரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கக்கூடாது. மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை மற்றும் உடற்தகுதி தேர்வில் தளர்வு வழங்கப்படும்.

    விருப்பம் உடையவர்கள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் 'காவல் சார்பு ஆய்வாளர் ஊர்க்காவல் படை அலுவலகம் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகம், திருச்சி' என்ற முகவரிக்கு வருகிற 5-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு திருச்சி சுப்பிரமணியபுரம், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

    • தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக “பசுமை தொழில் முனைவு திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி, விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்திட பசுமை தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக "பசுமை தொழில் முனைவு திட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் குறித்து தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம் இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4 லட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை மற்றும் பச்சை தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விருப்பமுள்ளோர் வருகிற 15 -ந் தேதிக்குள் கடலூர் புதுப்பாளையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம்.

    • மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.
    • போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

    திருச்சி

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. மாதிரி தேர்வானது ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும்.

    6 மற்றும் 7-ம் வகுப்பு தமிழ் பழைய மற்றும் புதிய பாட பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெறும். தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு, ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும். போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

    கந்தர்வகோட்டை வட்டார அளவிலான கலை போட்டியில்

    கந்தர்வகோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், வட்டார அளவிலான கலைத்திரு விழா போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் செளமியா, பல்குரல் போட்டியில் தரணிகா, தனிநடன போட்டியில் கல்பனா, செவ்வியல் நடனம் தனியொரு பிரிவில் ரித்திகா ஆகியோர் முதலிடம் பிடித்து புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். களிமண் சுதை வெளி ப்பாடு சிவகார்த்திகேயன், தோல்கருவிகள் கபிலன் ஆகியோர் மூன்றாவது இடமும் பெற்றனர்.நாடக குழுவில் சாலை பாதுகாப்பு என்ற நாடகத்தில் தீபக் தலைமையிலான குழுவில் தீபக்குமார், ஆசியா, தமிழரசன், கிரித்தீஷ், வீரலட்சுமி, ஹரிசேகரன், ஆகியோர் நடித்த நாடகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி, ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச் சாமி, தனலெட்சுமி, கெளரி ஆகி யோர் பாராட்டினார்கள்.

    • மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.
    • வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் விளையாட்டு ேபாட்டி நடைபெறவுள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

    குறிப்பாக கைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ், ஆக்கி, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பெற்று வருகின்றனர்.

    இவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தி வரும் நிலையில் குன்னூர் ஸ்டேன்ஸ் பள்ளியில் 68 மாணவ, மாணவிகள் தற்போது மாநில அளவிலான போட்டிகளில் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    வருகிற 28-ந் தேதி தேதி செங்கல்பட்டுவில் நடைபெற உள்ள மாநில விளையாட்டுப் போட்டிகளில் இந்த மாணவ - மாணவிகள் பங்கேற்பதற்காக தற்போது குன்னூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார்.
    • டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா. இவர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருநெல்வேலியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலமாக தமிழக நீச்சல் அணிக்கு அர்ச்சனா தேர்வாகியுள்ளார். டெல்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் அர்ச்சனா பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்

    • மாநில அளவிலான கோ-கோ போட்டி நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு பள்ளியில் நடைபெற்றது
    • தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு 12 பேர் தேர்வு

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய் யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நட த்திய 67-வது மாநில அள வில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில தேர்வு கோ-கோ போட்டி கள் நடைபெற்றது.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்ட லங்களில் தேர்வு பெற்ற 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற இறுதிப்போட்டியில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நைடைபெறும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. வெங்கடேசன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி  ஜீவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்றவர்களின் எடை, உயரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சுய விவரங்கள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.ஊர்க்காவல் படைக்குத் தேர்வு செய்யப்படுப வர்களுக்கு காவல்துறை மூலமாக 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
    • டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் கவிஞர் பாட்டாளி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழ்நாடு தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வசேவையா, மாநகர செயலாளர் பிரபாகர், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன், தமிழர் அறம் இயக்கத்தின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி யோகராஜ், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் நாத்திகன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.

    மதுரை

    இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.

    இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.

    ×