ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு

அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர்
ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. வெங்கடேசன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி  ஜீவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்றவர்களின் எடை, உயரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சுய விவரங்கள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.ஊர்க்காவல் படைக்குத் தேர்வு செய்யப்படுப வர்களுக்கு காவல்துறை மூலமாக 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com