search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகள் தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்
    X

    கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகள் தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

    • மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
    • டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் கவிஞர் பாட்டாளி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    மாவட்டச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழ்நாடு தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

    டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வசேவையா, மாநகர செயலாளர் பிரபாகர், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன், தமிழர் அறம் இயக்கத்தின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி யோகராஜ், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் நாத்திகன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×