search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elect"

    • மாநில அளவிலான கோ-கோ போட்டி நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு பள்ளியில் நடைபெற்றது
    • தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு 12 பேர் தேர்வு

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய் யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நட த்திய 67-வது மாநில அள வில் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாநில தேர்வு கோ-கோ போட்டி கள் நடைபெற்றது.போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.சென்னை, வேலூர், கடலூர், சேலம், கோவை, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய 8 மண்ட லங்களில் தேர்வு பெற்ற 72 மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடை பெற்ற இறுதிப்போட்டியில் 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் நைடைபெறும் கோ-கோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.இதில், நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் ஊர்க்காவல் படைக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
    • 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் எஸ்.பி. அந்தோணி ஆரி, டி.எஸ்.பி. வெங்கடேசன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி  ஜீவானந்தம் ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வில் 114 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 123 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் பங்கேற்றவர்களின் எடை, உயரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சுய விவரங்கள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.ஊர்க்காவல் படைக்குத் தேர்வு செய்யப்படுப வர்களுக்கு காவல்துறை மூலமாக 45 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை சிறப்பிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது
    • இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் ஆனிமேரி தகவல்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிறந்த நாள் ஆடித்திருவாதிரை விழா மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் எம்.எல்.ஏ.க்கள் க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்), சின்னப்பா (அரியலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேசும்போது கூறியதாவது:-கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் உலக புராதான சின்னமாகவும், பராம்பரிய சின்னமாகவும், தொன்மையான கட்டடக் கலையின் உன்னத அடையாளமாக விளங்கி வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது.கங்கைகொண்ட சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என பல்வேறு பெயர்களால் மக்களால் அழைக்கப்படுகின்ற மாமன்னர் ராசேந்திர சோழன் உதித்த நாளை நாடே போற்றும் வண்ணம் ஆடித் திருவாதிரை விழாவாக கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.ராசராச சோழன் காலத்திலேயே இளைய அரசராக பொறுப்பேற்று பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றியை கண்டவர் ராசேந்திரசோழன். இவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது அவருடைய ராணுவ கட்டமைப்பாகும். அதற்கு சான்றாக அமைந்தது தான் இந்த கங்கைகொண்ட சோழபுரம்.நாட்டிலேயே கடற்படை வைத்திருந்த ஒரே மன்னர் இவரே ஆவார். அதனால் தான் கடல் கடந்து பல நாடுகளை வென்று சோழ எல்லைகளை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சிக் காலம் பொற்காலம். இவருடைய சிறப்பான ஆட்சிக் காலத்தில் பெண்கள் சமூக வேலைகளில் முழுமையாக ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலத்திலேயே பெண்களை சமமாக கருதும் உயரிய சிந்தனை கொண்டவர் அவர்.எனவே தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோவில் உள்ளிடவற்றை சிறப்பிக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதன்படி அருங்காட்சியகத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இங்கு அகழாய்வு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அகழாய்வுகளில் பலவிதமான பண்டைய நாகரீகங்களின் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மாமன்னர் ராசேந்திர சோழனின் சிறப்புகள், வரலாற்றுப் பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், பரத நாட்டியம், கிராமிய நடனம், கட்டைக் கால் ஆட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாலமுரளி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சித் தலைவர் சரஸ்வதி வரவேற்றார். முடிவில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் நன்றி தெரிவித்தார்.

    • பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளராக ஜெயசீலன் தேர்தெடுக்கப்பட்டு உள்ளார்
    • 5வது அமைப்பு தேர்தலில் தேர்தெடுக்கப்பட்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான 5-வது அமைப்பு தேர்தல் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டல் கூட்டரங்கில் நடந்தது.இதில் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்களான ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகளாக மாவட்ட அவைத்தலைவராக அய்யலூர் சுப்பிரமணியனும், மாவட்ட செயலாளராக செ.ஜெயசீலனும், மாவட்ட பொருளாளராக பேரளி சரவணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி கவுன்சிலர் ரபியுதினும், மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆசிரியர் காமராஜ், கே.எஸ்.ரெங்கராஜ், அடைக்கப்பட்டி எல்.ஐ.சி. பாண்டியன், மங்கையர்கரசி சிகமணி ஆகியோரும், தலைமை பொதுக்குழு உறுப்பினர்களாக மெடிக்கல் முத்து, வெண்மணி ராஜசேகர், பம்பரம் பழனிமுத்து, அம்மாபாளையம் ஆசிரியர் துரைராஜ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் அனைவரும் சென்னை சென்று ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, உயர்நிலை குழு உறுப்பினரும், அரியலூர் சட்டமன்ற உறுப்பினரான சின்னப்பா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஏற்கனவே ம.தி.மு.க. தலைமை பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளராக ஜெயசீலனை நியமித்த நிலையில் இப்பொழுது. அமைப்பு தேர்தலின் மூலம் அவர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டியின்றி வெல்லமண்டி சோமு தேர்தெடுக்கப்பட்டார்
    • மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் அறிவிப்பு

    திருச்சி,

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தலைமைக்கழகச் செயலாளர் துரை.வைகோ ஆகியோரது வழிகாட்டலில் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ம.தி.மு.க. அலுவலகமான மண்ணச்சநல்லூர் நடராஜன் மாளிகையில் தலைமை கழக பிரதிநிதி ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டு, முடிவுகளை அறிவித்தார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக வெல்லமண்டி சோமு (எ) இரா.சோமசுந்தரத்தை போட்டியின்றி தேர்ந்தெடுத்து அறிவித்தார். அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட அவைத் தலைவராக புலவர் வே.தியாகராசன், மாவட்ட பொருளாளராக யானை கண்ணன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்களாக கவுன்சிலர் அப்பீஸ் (எ) முத்துக்குமார், எல்லக்குடி அன்புராஜ், துரை.வடிவேல், மலர்விழி ராஜன்,தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் கவுன்சிலர் முகமது முஸ்தபா, திலகவதி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்களாக பெல் பத்மநாபன், துரைராஜ், க.செல்வராஜ்,இரா.மனோகரன், ஜான்சன், மதலைமுத்து ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.மேலும் புதிய பகுதிச் செயலாளர்களாக ராமமூர்த்தி, சிவானந்தம், மனோகரன், கரிகாலன், ஆசிரியர் முருகன், கோபாலகிருஷ்ணன், காஜா மைதீன், சோமு, ஜெயச்சந்திரன், எப்.எஸ்.ஜெயசீலன், மெடிக்கல் முத்துகிருஷ்ணன், ஆடிட்டர் வினோத்குமார் மற்றும் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    ×