search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேடும் பணி"

    • அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் தென்பெண்ணை யாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் சக மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது விழுப்புரம் தோகைபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலு வலர் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகா ரிகள் வேல்முருகன், பாஸ்கரன் போட் மூல மாகவும் வீரர்கள் மாண வனின் உடலை 2-வது நாளாக தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் மற்றும் அதிகாரிகள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
    • எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே கூனிமேடு குப்பம் பகுதியில் நேற்று மாலை கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. இதனால் அந்தப் படகிற்கு உரிமையாளர்களான முத்து, உதயகுமார், சக்கரபாணி, குமரன் உள்ளிட்ட 20 பேர் மற்றும் மீனவ பொதுமக்கள் அங்கு திரண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த விசைப்படகு புதுச்சேரி துறை முகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இதனை அடுத்து நேற்று மரக்காணம் கூனிமேடு குப்பத்திற்கு கொண்டு வந்து கடற்கரை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது இந்த படகு கடலில் மூழ்கியது. இதனால் அங்குள்ள மீனவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து கடலோர காவல் துறை ரோந்து பணியி னருக்கும், மரக்கணம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் போதுமான வசதிகளுடைய துறைமுகம் அமைக்க வேண்டுமென அங்குள்ள மீனவ பொது மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அவர்கள் சாலை மறியல் செய்யப்போவதாக கூறினர் இதனை அறிந்த அதிகாரி கள் போலீசார் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு எந்தவித அசம்பா விதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு ப்பணியில் ஈடு பட்டுள்ள னர். இதனால் அந்த பகுதி யில் பரபரப்பாக உள்ளது. 

    • நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
    • சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன்கள் சரத்குமார் (வயது15), சிவக்குமார் (13). இதில் சரத்குமார், மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவக்குமார் ஆற்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்து க்கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினான்.

    அதிர்ச்சியடைந்த சரத்குமார், வெளியே வந்து சிவக்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனைதேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவனை மீட்க முடிய வில்லை. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம்கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றனர். அப்போது சிவக்குமார் கிணற்றில் பிணமா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதி யில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர்.
    • அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத் தினர் மிகவும் சோகம்

    நாகர்கோவில் :

    தேங்காய் பட்டணம் துறைமுக முகப்பு பகுதியில் அடிக்கடி படகுகள் கவிழ்ந்து விபத்துக்கள் நடக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதி யில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூத்துறையைச் சேர்ந்த சைமன் என்ற மீனவர் படகு கவிழ்ந்து பலியானார்.இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    துறைமுக முகத்துவா ரத்தில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரி போராட்டம் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மீன்வ ளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    இந்த பிரச்சனை தொடர் பாக விஜய்வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தும் வலி யுறுத்தினார்கள். துறைமுக முகத்துவாரத்தில் உள்ள மணலை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து இருந் தார்.

    இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கினார்கள்.இந்த நிலையில் நேற்று மீண்டும் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.இணையம் புத்தன் துறையைச் சேர்ந்த வர் அமல்ராஜ் (வயது 67). இவர் நேற்று காலை இன்ஜின் இல்லாத சிறிய பைபர் படகு ஒன்றில் தேங்காய்பட்டணம் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். மதியம் கரை திரும்பிக் கொண்டிருந்த போது தேங்காய்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவார பகுதியில் வந்தபோது மணல்திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது.

    இதில் அமல்ராஜ் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். அப்போது அந்த வழியாக படகில் வந்த மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் ராட்சத அலை அமல்ராஜை மூழ்கடித்தது.இதைத் தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அமல்ராஜ் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கட லோர காவல் படை போலீ சாரும் மீனவர் களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதை தொடர்ந்து தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்து வருகிறது. ஆனால் அமல்ராஜ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் அவரது கதி என்னவென்று தெரிய வில்லை. மீனவர் மாயமாகி உள்ளதால் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

    7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காரைக்கால்:

    கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற, காரைக்கால் மேடு மீனவர்கள் 7 பேர் மாயமானது குறித்து, இந்திய கடலோர காவல் படையினர் தீவிரமாக தே டிவருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது40). இவருக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 18-ந் தேதி கிருஷ்ணமூர்த்தி, அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி (36), முருகானந்தம் (40), வேலுச்சாமி (55), செந்தில் (38) மற்றும் கீழக்கசாக்குடி மேட்டை சேர்ந்த ராமசாமி (52), ராஜ்குமார் (30) ஆகிய 7 மீனவர்கள் வழக்கம்போல், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் 7 பேரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மீனவர்களின் இருப்பிடம் மற்றும் செல்போன் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார்கள் காரைக்கால் கடலோர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை சென்னை தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் மாயமான 7 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • மீனவர் உடை கரை ஒதுங்கியதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்
    • சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்ததில் அலையில் சிக்கிக் கொண்டார்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40), மீன்பிடித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பகலில் வலையை கடலில் வீசிவிட்டு இரவில் வழக்கம்போல் வலையை இழுக்க சென்றார்.

    அப்போது சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவும்போது நிலை தடு மாறி விழுந்தார். இதில் அலையில் அவர் சிக்கிக் கொண்டார். மேலும் அலை யில் அவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் அவ ரது உறவினர் ஸ்டான்லி புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் தியாக ராஜன் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனவர் தேவதாசனை தேடும் பணி யில் ஈடுபட்டார்.

    இன்று 3- வது நாளாக மரைன் போலீசார் மற்றும் உறவினர்கள் 5 வள்ளங்களில் சென்று தேவ தாசனை தேடும் பணியில் ஈடுப்பட்டனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் மாயமான மீனவர் தேவதாசனின் லுங்கி கடல் அலையில் இன்று கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாமோ? என குடும்பத்தினர் பீதியடைந்து உள்ளனர். அவர்கள் சோகத்துடன் கடற்கரையிலேயே அமர்ந்துள்ளனர்.

    மாயமான மீனவர் தேவதாசனுக்கு, ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.

    ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது.

    பரமத்திவேலூர்:

    பெங்களூரு சிங்காபுரம் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 20). இவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில்ஸ்ரீதர் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு வந்துள்ளார். சேந்தமங்கலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாவிற்காக நேற்று அதே ஊரைச் சேர்ந்த 11 பேர்களுடன் தீர்த்தம் எடுப்பதற்காக ஜேடர்பாளையம் படுகை அணையில் உள்ள காவிரி ஆற்றுக்கு ஸ்ரீதர் சென்றுள்ளார். படுகை அணை காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலில் அவர்கள் குளித்து விட்டு கரை திரும்பினர். அப்போது ஸ்ரீதர் மட்டும் கரை திரும்பவில்லை.

    இது குறித்து அவருடன் வந்தவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார், ராஜா வாய்க்காலில் மாணவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து நாமக்கல் தீயணைப்பு துறையினர் மூலம் நேற்று மாலை வரை தேடினர். ஆனால் இரவு ஆகிவிட்டதால் போதிய வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு துறையினர் சென்று விட்டனர். மீண்டும் 2 -வது நாளாக இன்று (திங்கட்கிழமை) காலை தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் மூலம் ராஜா வாய்க்காலில் பரிசல் மூலம் கல்லூரி மாணவரை தேடி வருகிறார்கள்.

    239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத்தை தேடும் பணி அடுத்த வாரத்திற்கு பிறகு நிறுத்தப்படும் என மலேசிய போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. #MissingMalaysianFlight #MH370
    கோலாலம்பூர் :

    மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது

    இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. ஆஸ்திரேலியக் கடற்படை கப்பல் ‘ஓஷன் ஷீல்ட்’ மற்றும் எச்.எம்.எஸ் ‘எக்கோ’ என்ற இரண்டு கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதுதவிர மேலும் பல தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. 

    ஆனால், 1046 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில் எந்த பலனும் கிடைக்காத நிலையில் தேடும் பணியை நிறுத்திக் கொள்வதாக மலேசியா, சீனா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்தன. 

    கடந்த ஆண்டு ‘ஓசியன் இன்பினிட்டி’ எனும்  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ‘கண்டுபிடித்தால் பணம் - இல்லாவிட்டால் சேவை இலவசம்’ என்னும் ஒப்பந்த அடிப்படையில் இந்திய பெருங்கடல் பகுதியில் மாயமான அந்த விமானத்தை தேட முன்வந்து விருப்பம் தெரிவித்தது. அதன் அடிப்படையில் விமானம் அல்லது விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்தால் 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என மலேசிய முன்னாள் போக்குவரத்து துறை மந்திரி லியோவ் டியாங் ஒப்பந்தம் செய்திருந்தார்.

    இந்த பணிக்காக ‘ஓசியன் இன்பினிட்டி’ என்னும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அதிநவீன கப்பல் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்கு உட்பட்ட கடல்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சோனார் மற்றும் அதிநவின கேமராக்கள் பொருத்தப்பட்ட எட்டு ஆழ்கடல் ட்ரோன்களை பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள மஹாதிர் முகமது  ‘ஓசியன் இன்பினிட்டி’ நிறுவனத்துடன் விமானத்தை கண்டுபிடிக்க ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து, இன்று பேசிய மலேசியாவின் புதிய போக்குவரத்து மந்திரி அந்தோனி லோக், மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இம்மாதம் 29-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும். அதன் பின்னர்,தேடும் பணி கைவிடப்படும் என தெரிவித்தார். #MissingMalaysianFlight #MH370
    ×