search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீமிதி திருவிழா"

    • 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
    • நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் - தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க பெண்கள், சிறு வர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடை பெற்றது. மாலையில் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • தர்மர் பிறப்பு, திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழபெரம்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு திருவிழா சித்திரை மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அல்லி திருமணம், தர்மர் பிறப்பு , திரவுபதி பிறப்பு உள்ளிட்ட கதை பாட்டு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான படுகள நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சாமி வீதியுலா, கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
    • 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. கடந்த 19-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலையில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • பரமேஸ்வரி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    • இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மாமாகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதனையடுத்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் பெருமாள் கோவில் குளத்தில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க அக்ரஹாரம் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.
    • நாளை மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வில்வராய நத்தத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறு வது வழக்கம். தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று வந்தது. நேற்று முக்கிய விழாவான திருக்கல்யாணம உற்சவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத் தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து வில் வளைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் பரிவேட்டை, சாமி வீதி உலா, அரவான் களப்பலி மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் 21 சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் அடங்கிய வரிசை தட்டு மற்றும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச சலம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் கலந்து கொண்ட னர்.

    இன்று (18 ந்தேதி) மாலை அர்ஜுனன் தபசு, விசேஷ சாந்தி, சாமி வீதி உலா, கரகத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (19 ந்தேதி) பிரம்ம உற்சவத்தின் சிகர விழாவான தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அரவான் புறப்பாடு, வீர மாங்காளி புறப்பாடு உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழாக நடைபெற உள்ளது. விழாவிற்கு அய்யப்பன் எம். எல்.ஏ , 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கு கிறார்கள். கூட்டு றவுத்துறை தனி அதிகாரி கிருஷ்ணராஜ், மகாலட்சுமி கல்வி நிறுவன உரிமையாளர் ரவி ஆகி யோர் கலந்து கொள்கிறார் கள். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடு களை விழா குழு தலைவரும், ஸ்ரீ திருப்பதி வெங்கடா ஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளருமான அருணாச்சலம், நிர்வாக செயலாளர் செல்வராஜ், இணை செயலாளர் திருமால்ராஜ், பொருளாளர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

    • 23-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • 24-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது

    கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மன் வீதியுலாவும், பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 22-ந்தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 23-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    24-ந்தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது.
    • சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்திற்குட்பட்ட மகாமாரியம்மன் தீமிதி திருவிழா, கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலாவாக வந்து தீக்குழி நடைபெற்ற இடத்தின் முன்பு நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மாரியம்மனை வழிபட்டனர். சில பக்தர்கள் அலகு காவடி ஏந்தியவாறு தீக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். விழாவில் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.

    • திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
    • 16அடி நீளம் அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.

    அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் குண்டாமணி, விழா குழுவினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • வெள்ளிக்கிழமை மறு பூஜை உடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    மேட்டுப்பாளையம் ஓடந்துறை பவானி ஆற்றின் கரையோர பகுதியில் மகாமக பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 48-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பொரி சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து குஞ்சப்பனை கோவிலில் இருந்து அக்னி கம்பம் எடுத்து வருதல், திருவிளக்கு பூஜை, கோத்தகிரி ரோடு முனியப்பன் கோவிலில் இருந்து பூச்சட்டி கரகத்துடன் பவானி அம்மனை கோவிலுக்கு அழைத்து வருதல், குண்டம் திறத்தல், பூ வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லித்துறை ரோடு வீரமாஸ்தியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அம்மன் ஊர்வலம் காலை 7 மணிக்கு புறப்பட்டு, 9 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. கோவில் தலைமை பூசாரி ராஜேந்திரன் கையில் வேல் எடுத்து குண்டத்தை 3 முறை வலம் வந்து சிறப்பு பூஜை செய்து குண்டத்தில் மல்லிகை மலர்ச்செண்டை வீசி அருளுடன் குண்டத்தில் இறங்கி நடந்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து ரவிக்குமார் கோலக்கூடை, சக்திகரகம் சுப்பிரமணி, சிவன் கரகம் பூபதி, யுவராஜ், சரத்குமார் ஆகியோர் சப்பரத்தில் உற்சவம் மூர்த்தியை எடுத்து குண்டம் இறங்கினார்கள். பின்னர் பக்தர்கள், கைக்குழந்தையுடன் பெண்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) பவானி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம், மா விளக்கு எடுத்தல், அலகு குத்துதல், நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடல், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மறு பூஜை உடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூரில் தர்மராஜா கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    இதைமுன்னிட்டு கடந்த 7-ந் தேதி காலை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு தபசு மரம் அமைத்து அர்ச்சுனன் வேடமணிந்த நாடக நடிகர் மரத்தின் உச்சியில் ஏறிச் சென்று ஈசனிடம் பாசு பதாஸ்திரம் வேண்டினார்.

    நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி குழந்தை வரம் வேண்டியும் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் வேண்டியும் வணங்கினர். தபசு மரத்தில் இருந்த கீழே தனது கையிலிருந்த பிரசாதங்கள் பக்தர்கள் வீசினார்.

    வருகிற 12-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26- ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பெண் பக்தர்கள் தீ வாரிப்போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சாப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×