search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire stamping festival"

    • பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து பூ கரகத்துடன் ஊர்வலம் சென்றனர்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்தனர்

    வந்தவாசி :

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் ஆடி மாதம் முன்னிட்டு தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    பக்தர்கள் மஞ்சள் உடை அணிந்து கொண்டு பூ கரகத்துடன் ஊர்வலமாக சென்று தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீ பச்சையம்மனுக்கு மங்கல மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த தீமிதி திருவிழாவை காண வெடால் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பச்சையம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • 10 ஆண்டுக்கு பின் கடந்த 23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, 10 ஆண்டுக்கு பின் கடந்த

    23-ந் தேதி விமரிசையாக நடைபெற்றது.

    இதனையடுத்து, நேற்று முன்தினம் மஞ்சள் நீரா டலும், சக்தி இறக்கம் மற்றும் காப்பு அவிழ்த்தலும் நடை பெற்றது. நேற்றிரவு, மகா பாரத இதிகாசத்தில் குறிப்பி டப் பட்டுள்ளபடி, திரவுபதி அம்மன் அவிழ்ந்த கூந்தல் முடிதல் மற்றும் தருமராஜா பட்டாபிஷேகமும், யாக பூஜை கணபதி ஹோமத்து டன் நடைபெற்றது.

    இதில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தர்ம ராஜரும், திரவுபதி அம்ம னும் மலர் மாலை அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
    • 16அடி நீளம் அலகு குத்தி பக்தர் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலின் 61-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 2-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 16 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன.

    அங்கு விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் குண்டாமணி, விழா குழுவினர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
    • அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூரில் தர்மராஜா கோவிலில் மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

    இதைமுன்னிட்டு கடந்த 7-ந் தேதி காலை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு தபசு மரம் அமைத்து அர்ச்சுனன் வேடமணிந்த நாடக நடிகர் மரத்தின் உச்சியில் ஏறிச் சென்று ஈசனிடம் பாசு பதாஸ்திரம் வேண்டினார்.

    நிகழ்ச்சியில் தபசு மரத்தை சுற்றி குழந்தை வரம் வேண்டியும் திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு திருமணம் வேண்டியும் வணங்கினர். தபசு மரத்தில் இருந்த கீழே தனது கையிலிருந்த பிரசாதங்கள் பக்தர்கள் வீசினார்.

    வருகிற 12-ந்தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது.
    • இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

    காகாபாளையம்:

    இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தர் கோவில் சிறப்பு திருவிழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி விநாயகர் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் பொங்கல் வைப வம், ராகிகளி படையல் மற்றும் உருளுதண்டம் நடந்தது.

    நேற்று மதியம் காளியம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.மாலையில் தீ மிதித்தல் நடந்தது. பக்தர்கள் அதில் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    அதனை தொடர்ந்து அன்னதானம், நீர் மோர் வழங்குதல் நடந்தது. பின்னர் நல்லணம்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு சித்தர்போல் அலங்காரம் செய்தனர். பின் அவரை ஒருவர் மாட்டுகயிறால் மூன்று முறை அடித்தார்.

    பின் அவரிடம் குருக்கள் எப்போது மழை வரும் என்று கேட்டதற்கு இன்னும் 3 நாட்களில் மழை வரும் என கூறினார். ஆண்டு தோறும் இவ்வாறு அருள்வாக்கு கேட்பதும், அவர் கூறியது போல் சுற்று வட்டாரத்தில் மழை பெய்வது வழக்கமான ஒன்றாகும்.

    • பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 25-ம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26- ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை தினந்தோறும் இரவு யானை, காமதேனு, அன்னம், சர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஆண் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். பெண் பக்தர்கள் தீ வாரிப்போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று காலை அழகு போடுதல், அக்கினிசட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. நாளை கம்பம் காவிரி ஆற்றில் விடுதலும், இரவு சாப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாலை மஞ்சள் நீராடலும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புது மரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டிக்கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஸ்ரீ தருமராஜா கோவில் ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவிலில் 94 -ம் ஆண்டு மகாபாரத பிரசங்கம் மற்றும் அக்னி வசந்த தீ மிதி திருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழா இன்று தொடங்கி 18-ந் தேதி வரை 22 நாட்கள் நடைபெற உள்ளது.

    இன்று காலை கொடி மரத்திற்கு மாலையணிவிக்கப்பட்டு மாவிலை தென்னை ஒலையால் தோரணம் அமைத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு மங்கல வாத்தியங்கள் தாரை தம்பட்டங்கள் முழங்க மகாபாரத கொடி கருடன், ஆஞ்சநேயர் படத்துடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து தீமிதிக்க மஞ்சள் கயிறு கொண்டு காப்பு கட்டிக்கொண்டனர்.

    • நன்செய் இடையார் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மகாமாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையார் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 12-ந் தேதி இரவு ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மகாமாரியம்மன் கோயில் முன்பு உள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    தினந்தோறும் இரவு கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19-ந் தேதி இரவு மறு காப்பு கட்டுதலும்,அன்று இரவு முதல் 25-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 26-ந் தேதி இரவு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், நேற்று அதிகாலை (திங்கட்கி ழமை) கோயில் முன்பு 62 அடி நீளமுள்ள பூ குண்டம் வெட்டப்பட்டு பூ போடப்பட்டது.அதனை தொடர்ந்து மதியம் 2- மணிக்கு மேல் ராஜா கோயிலில் இருந்து மணிவேல் புறப்பட்டு மகாமாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் தீமிதி விழா தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது.

    தமிழகத்திலேயே மிக நீளமான பூக்குண்டமாக கருதப்படும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் ஆண் பக்தர்கள் தீ மிதித்தும், சுமார் 30 ஆயிரம் பெண்கள் பூ வாரிபோடும் விழாவிலும் கலந்து கொண்டு தங்க ளது நேர்த்திக்கடனை செலுத்தி னர்.அதனை தொடர்ந்து இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை கிடா வெட்டும் நிகழ்ச்சி யும்,மாலை மாவிளக்கு பூஜை மற்றும் அழகு போடுதல், அக்னிசட்டி எடுத்தல் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நாளை காலை கம்பம் ஆற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் விழாவும் நடைபெறுகிறது.

    பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கருதி துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.மேலும் பக்தர்களின் வசதிக்காக வேலூரில் இருந்து

    அரசு போக்குவரத்து கழகம்

    சார்பில் நன்செய் இடையாறு

    மகா மாரியம்மன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்

    பட்டு வருகிறது. திருவிழா விற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகாமாரியம்மன் கோவில் எட்டுபட்டி ஊர் தர்மகர்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓம் காளியம்மன் கோவில் மாசிக் குண்டம் திரு விழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது. குண்டம் இறங்க பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தினசரி அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

    மேலும் அலகு குத்தியும் அக்னிசட்டி ஏந்தியும் வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலையில் தொடங்கியது. குண்டம் இறங்கி தீமிதிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    60 அடி நீளமுள்ள குண்டத்தில் தகதகவன கொளுந்து விட்ட தீக்குள் கோவில் பூசாரி முதலில் தீமிதிக்க தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கினார்கள். முன்னதாக ஓம் காளிபூசாரி குண்டம் இறங்கிய போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி பரவ சத்தில் கோஷமிட்டனர்.

    பெண்கள் தங்கள் குழந்தைகளை கைகளில் தூக்கியபடி குண்டத்தில் இறங்கி நடந்தனர் இந்த குண்டம் இறங்கும் நிகழ்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    • தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்த்தக்குட ஊர்வலம் மற்றும் முத்துக்குமாரசாமி படைக்கோலம் ஆகிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று 3-ம் நாள் நிகழ்ச்சியாக அக்னி பிரவேசம் என்று அழைக்கக்கூடிய தீ மிதி திருவிழா நடந்தது. அதிகாலை 4 மணிமுதல் தொடங்கி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் முதற்கொண்டு கோவிந்தா, அரோகரா கோஷங்கள் முழங்க பக்தியுடன் தீ மிதித்தனர்.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மாலையில் அழகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

    ×