search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "throwpathi amman"

    • இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். முன்னதாக கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்களாக விசேஷ அபிஷேக ஆராதனையும், மகாபாரத கதை நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது.

    தொடர்ந்து இரவு அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பகவானுக்கு அன்னம் அளித்தல், திருக்கல்யாண உற்சவம், அர்ஜூனன் தபசு, விதுரர் விருந்து, கரகத்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மஞ்சள் நீராட்டு, சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    இதனை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந்தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது.

    மதியம் 3 மணிக்கு தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7-ந்தேதி மாலை 4 மணிக்கு உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 8-ந் தேதி காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளிப்பாளையம், துத்தாரிபாளையம் மற்றும் வலையபாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • இன்று தர்மர் பட்டாபிஷேகமும், சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி உற்சவம் கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணி அளவில் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 7 மணி அளவில், விரதமிருந்த திரளான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிஅளவில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

    • 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
    • நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ்பெற்ற திரவுபதி அம்மன் - தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந்தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க பெண்கள், சிறு வர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து உச்சிகால பூஜை நடை பெற்றது. மாலையில் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக பக்தர்கள் தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. கடந்த 19-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காலையில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

    மாலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
    • 22-ந்தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

    கீழ்வேளூர் அருகே இலுப்பூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பிள்ளையார் கோவிலில் இருந்து பெண்கள் சீர் வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் திரவுபதி அம்மன்-அர்சுனனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 22-ந்தேதி காலை தீமிதி திடலில் படுகளமும், அம்மன் கூந்தல் முடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கம்மாபுரம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    கம்மாபுரம் அருகே சொட்டவனம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீ மிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திரவுபதி அம்மன் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார். பின்னர் அக்னி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கம்மாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர் 
    ×