search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளுவர் சிலை"

    • திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரிசுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கினார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டிய ராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    • விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தாமதம்
    • அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த பிறகு கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 3 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.

    • சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய திருவள்ளுவர் சிலையை அவரது சொந்த செலவில் அமைத்தார்.
    • இந்த சிலை திறப்பு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.

    சூளகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்று வட்டாரங்களில் இருந்து 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தருகின்றனர்.

    மேலும் இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி அளித்து வருகின்றனர். பி.டி.ஏ. நிர்வாகமும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கல்வியிலும் விளையாட்டிலும் பல்வேறு வளர்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பல ஆண்டுக்கு முன்பு ஈரோடு பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஜெயராமன் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றினார். பின்பு ஒய்வு பெற்று ஈரோடு சென்று விட்டார்.

    பின்னர் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய திருவள்ளுவர் சிலையை அவரது சொந்த செலவில் அமைத்தார்.

    இந்த சிலை திறப்பு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா, பி.டி.எ. தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, செயலர்கள் சுதாகர், சேகர், தி.மு.க. மாநில இளைஞர் அணி சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத், தொழில் அதிபர்கள் கோபால், மண்னா, சீனிவாசன், பச்சமூத்து, செந்தில்குமார், மகேஷ், தங்கவேலு, இந்துஸ்தான் மேலாளர் ராமசந்திரன், சூளகிரி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், மற்றும் ஆசிரியர்கள் ராமசந்திரன், சதீஷ், செல்வம், மூகமதுஅலீ, கோவிந்தராஜ், ரங்கநாயகி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தல மான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுஉள்ளது.

    இந்த சிலையைகடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். கடல் நடுவில இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துஉள்ளதால் இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்புகாற்றின்பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்தமுறை திருவள்ளுவர்சிலைபராம ரிப்புபணியானதுரூ1கோடி செலவில்கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது.அதைத் தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவது மாக சுத்தம் செய்யப்பட் டது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய் யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்டஇரும்புபைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது. ரசாயன கலவை பூசும்பணிநிறை வடைந்து உள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளூர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற 6-ந்தேதி முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளு வர் சிலைக்கு படகு போக்கு வரத்துஇயக் கப்படுகிறது.இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளு வர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப் படுத்தப்பட்டு தயாராகி கொண்டிருக்கிறது.

    • வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
    • குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கம் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

    இதேபோல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    • உயர்நீதிமன்ற நீதிபதி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தில் திருவள்ளுவர் உருவசிலை திறப்பு விழா அமைப்பு குழு தலைவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ஏகாச்சாரம் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகச் செயலாளர் கண்ணப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் டி.கே.மூர்த்தி, சாம்பசிவன், அருனகிரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு மற்றும் பலர் உடன் இருந்தனர். முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

    • கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு
    • படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குடியரசு தினத்தை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    இந்தியாவின் 74-வது குடியரசு தினவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டு உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரி யிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி நகர பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப் பட்டு உள்ளது.கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகிறார்கள். மேலும் கன்னியாகுமரி ரெயில் நிலையம், பஸ் நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48கடற்கரை கிராமங்களி லும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாக போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சொந்தமான சோதனை சாவடிகளில் இரவு பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கி றார்களா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    • திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கியது.
    • ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.

    அதன்படி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கியது. அப்போது சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

    அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "வாக்கர்" எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.

    தற்போது ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து 133 அடி உயர திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது. இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இன்னும் ஒரு சில நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதையடுத்து மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.


    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    இதையடுத்து திருவள்ளுவர் விருது, தமிழக அரசின் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கினார்.

    • கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
    • பாலத்தின் மீது நடந்து செல்லும் போது நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேகண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துஉள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுஉள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி இன்றுகாலை தொடங்கியது.விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் சிறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
    • கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை கடந்த 2000 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி புத்தாயிரம் ஆண்டு மலரும்போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவிய 22-வது ஆண்டுவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த திருவள்ளுவர் சிலை நிறுவிய ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

    தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை வளாகத்தில் மாதிரி திருவள்ளுவர் சிலையை வைத்து அதற்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றம் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

    • சாரம் பிரிக்கும் பணி தீவிரம்
    • பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று உள்ளது.

    இந்த பணி நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி ரசாயன கலவை பூசும் பணி முடிவடையும் வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் இப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

    முதல்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருந்த கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர்சிலையில் படிந்து உள்ள உப்பு தன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி நடைபெற்றது. அதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இறதி கட்டமாகரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் குழு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆய்வு செய்தனர். அப்போதுஅந்த குழுவினர் திருவள்ளூர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்று பரிசோதித்துப் பார்த்தனர். அதன் பிறகு திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும்பணி நடந்து வந்தது. திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசம் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து தற்போது 145அடி உயரத் துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த சாரம் பிரிக்கும்பணி நிறைவடைந்தும்பொங்கல் பண்டிகை முதல்திருவள்ளு வர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ×