search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு விழிப்புணர்வு"

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

    ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.

    ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.

    சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

    • மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவுபடி, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சவுந்தரராஜன் ஆகியோர் ஜெயராம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கொசுக்கள் எப்படி உருவாகின்றன என்றும், அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறை, கொசுக்கள் எவ்வாறு நோய் பரப்பிகளாக செயல்படுகின்றன என்றும்,

    அவைகளை கட்டுப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துதல்,

    தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் சேமித்து வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேரியா மற்றும் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களான தேங்காய் சிரட்டைகள், உடைந்த பானைகள்,பழைய டயர்கள், உடைந்த டப்பாக்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கொசு புழுக்களையும் பாட்டிலில் அடைத்து வைத்து பள்ளி மாணவர்களும் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பின்னர் அனைவரும் மலேரியா நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் நகராட்சி அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நெடுகுளா, குருக்கத்தி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்தில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    ×