search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Prevention Awareness"

    • சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேப்பங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில்:-

    மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது. சாக்லேட் உள்ளிட்ட பல வடிவங்களில் போதை பொருள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன.

    மேலும் பள்ளி பருவத்தில் ஒழுக்கம், கல்வி கற்றல், ஒற்றுமை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

    இந்த கல்வி பருவத்தில் போதை மற்றும் பல்வேறு குற்றங்களில் ஈடுபடாமல், நன்கு படித்து பல்வேறு துறைகளில் அதிகாரியாக விளங்க வேண்டும் என அறிவுறை கூறினார்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நெடுகுளா, குருக்கத்தி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்தில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    • ஆரணி போலீஸ் நிலையத்தில் நடந்தது
    • தடையை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல்- எச்சரிக்கை

    ஆரணி:

    ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகளுடன் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் அனைவரையும் வரவேற்றார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.பி ரவிசந்திரன் பங்கேற்றார்.

    மேலும் டி.எஸ்.பி பேசியாதாவது:-

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது தடையை மீறி விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஆரணி வியாபார சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • திண்டுக்கல்லில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது
    • இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஜி.டி.என். கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ரெயில் நிலையத்தில் போதை தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோசமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.

    நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். 14 பட்டாலியனை சேர்ந்த ராணுவவீரர்கள் நாயக்குகன், ஹவில்தார் செல்வம், என்.சி.சி. அதிகாரி பாண்டீஸ்வரன், ரெயில்வே சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், சதீஸ், ரெயில்வே பாதுகாப்பு காவலர்கள், கோட்ட வணிக ஆய்வாளர் வீரபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    என்.சி.சி. மாணவர்கள் மற்றும் கே.வி.பள்ளி மாணவர்கள், ரெயில் நிலைய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குஜிலியம்பாறையில் போலீசார் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குஜிலியம்பாறை:

    குஜிலியம்பாறையில் போலீசார் சார்பில் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் போதைபொருட்களை பயன்படுத்தி வாழ்க்கையை சீரழித்து கொள்ள கூடாது என அறிவுறுத்தினர்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணி குஜிலியம்பாறை பஸ்நிலையம், கடைவீதி வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.

    இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன், வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, பாளையம் நகர செயலாளர் கதிரவன், பேரூராட்சி சேர்மன் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக போடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சமூக ஆர்வலர் வனராஜ் மற்றும் பெரியார் சேவை மையத்தின் செயலாளர் சுருளிராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு போதையின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த சிறப்பு போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் துணை முதல்வர் பாலமுருகன், போடி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    ×