என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கருத்தரங்கு"

    • கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு.

    எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.

    கருத்தரங்கில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவதற்கான நுண்ணறிவுகள் மற்றும் உத்திகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் ஐ.ஏ.எஸ்., ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்., கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


    கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாரம்பரிய விளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா, அர்ப்பணிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட தேர்வுத் தயாரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தலைமை உரையை நிகழ்த்தினார்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப், ஐ.ஏ.எஸ்., பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

    ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், ஐ.பி.எஸ்., தலைமைத்துவம் மற்றும் சிவில் சேவைகளில் சட்ட அமலாக்கத்தின் முக்கியப் பங்கு குறித்து பேசி ஊக்கப்படுத்தினார்.

    கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன், வெற்றிக்கான நடைமுறை உத்திகளைக் கொண்டு மாணவர்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் ஒரு ஊடாடும் கேள்வி பதில் அமர்வை நடத்தினார்.


    நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பங்கேற்பாளர்கள் குடிமைப் பணித் தேர்வின் சவால்களை எதிர்கொள்ள ஒரு மிகச் சிறப்பான முன்னெடுப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது.

    • சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடக்கிறது.
    • தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் மூலிகை மருந்துகள் மற்றும் மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கினார். டாக்டர் சண்முகம், டாக்டர் ஷங்கர், டாக்டர் பிரியங்கா துவாரம்புடி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். கல்லூரி இணை பேராசிரியர் அருண் அனைவரையும் வரவேற்றார். இதில் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை தலைவர் சண்முகம், லக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். ராஜேஷ் குமார் ஜா, முதன்மை விஞ்ஞானி மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி டாக்டர் நசீம் ஏ.சித்திகி, சமூக சேவகர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், போஸ்டர் மற்றும் ஆயுவுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டது. விழாவின் நிறைவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் சரவணமுருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜய ரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் பேசும்போது, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும், தலைக்கவசத்தின் அவசியம் பற்றியும் விளக்கி பேசினர். அப்போது, கடந்த ஆண்டு சாலை விபத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இனி வரும் காலங்களில் விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும், அது உங்கள் கையில் தான் உள்ளது. மிதவேகம் மிக நன்று, என்ற கருத்தை மனதில் கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும் என்றனர். முடிவில் விவசாய ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி இணை பேராசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு பள்ளி, கல்லூரிகளின் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்திரமோகன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புத்தகங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துணை மேலாளர் ராஜராஜன், இணை பேராசிரியர்கள் பீம்மராஜ், ரவி, கிருஷ்ணன், நுகர்வோர் மன்ற பொறுப்பாளர் படையப்பா மற்றும் அருண், சாகுல்அமீது உள்பட கல்லூரி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியில் போலீசார் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக போடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி ரவீந்திரநாத் மற்றும் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சமூக ஆர்வலர் வனராஜ் மற்றும் பெரியார் சேவை மையத்தின் செயலாளர் சுருளிராஜன் ஆகியோர்கள் கலந்து கொண்டு போதையின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த சிறப்பு போதை விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் போதை மாற்றும் பாதை என்ற தலைப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் துணை முதல்வர் பாலமுருகன், போடி இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    ×