கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கோத்தகிரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
Published on

கோத்தகிரி,

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நெடுகுளா, குருக்கத்தி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்தில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com