என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ேபாதை தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
- திண்டுக்கல்லில் போதைத் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது
- இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஜி.டி.என். கலைக்கல்லூரி தேசிய மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ரெயில் நிலையத்தில் போதை தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோசமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.
நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். 14 பட்டாலியனை சேர்ந்த ராணுவவீரர்கள் நாயக்குகன், ஹவில்தார் செல்வம், என்.சி.சி. அதிகாரி பாண்டீஸ்வரன், ரெயில்வே சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், சதீஸ், ரெயில்வே பாதுகாப்பு காவலர்கள், கோட்ட வணிக ஆய்வாளர் வீரபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
என்.சி.சி. மாணவர்கள் மற்றும் கே.வி.பள்ளி மாணவர்கள், ரெயில் நிலைய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






