search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி அமைச்சர்"

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    • பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.
    • தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து.

    பாரதீய ஜனதா கட்சியில் சேராவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று டெல்லி பெண் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது.

    மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பா.ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிஷி கூறியதாவது:-

    ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று), எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பாஜக புகார் அளித்தது. ஏப்ரல் 5-ம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிப்பரப்பின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்தது.

    அதாவது, தேர்தல் கமிஷன் நோட்டீசை முதலில் ஊடகங்களில் பா.ஜ.க.வினர் போடுகிறார்கள் அதன் பிறகு எனக்கு நோட்டீஸ் வருகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதே எனது கேள்வி.

    அனைத்து மத்திய அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டது கவலைக்குரிய விஷயம்.

    மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூட பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்சனைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.

    எம்சிசி செயல்படுத்தப்பட்ட பிறகும், மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆனால் பா.ஜ.க.வினர் புகார் பதிவு செய்த உடனேயே 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருகிறது. நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா?

    டிஎன் சேஷனின் வாரிசுகளாக இருந்து, இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவர்களின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறையின் குளியலறையில் விழுந்ததில் அவரது முதுகெலும்பில் அடிபட்டது. இந்த காயத்திற்காக அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார்.

    சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்யேந்திர ஜெயின் அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. 

    ×