search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஆர்.பி. ராஜா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது.

    கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா பெயர் சூட்டி உள்ளது. கிழக்கு அருணாச்சலில் உள்ள பகுதியை தங்களது ஆளுகைக்கு உட்பட்ட "ஸங்னங்" பகுதி என பெயரிட்டு சீனா அழைக்கிறது.

    11 குடியிருப்பு மாவட்டங்கள், 12 மலைகள், 4 ஆறுகள், 1 ஏரி, 1 நிலப்பகுதி உள்ளிட்ட 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ளது.ஏற்கனவே 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அருணாச்சலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி உள்ளது.தற்போது 4வது முறையாக அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு, புதிய பெயர்களை சீனா சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    இதற்குத்தான் கச்சத்தீவு திசை திருப்பும் நாடகமா? நமது நாட்டிற்குள் ஊடுருவி நமது ஊர்களுக்கு சீனப் பெயர்கள் சூட்டிவரும் சீனாவை கண்டு தொடை நடுங்கும் முதுகெலும்பு இல்லாத பாஜக அரசு சீனாவுக்கு இந்தியாவை தாரை வார்க்கவா துடிக்கிறது? என்று பதிவிட்டுள்ளார்

    • எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்
    • பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    அரசு திட்டங்களின் பயன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைந்துள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக நீங்கள் நலமா? என்கிற புதிய திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.

    இத்திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், தனது எக்ஸ் பக்கத்தில், "நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு.சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு. விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு. எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

    அதில், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார். விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    தூத்துக்குடியில் மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAA-வுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

    கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்த ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிடமாடல் ஆட்சியில்" என்று பதிவிட்டுள்ளார். 

    ×