search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாமீன்"

    • ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.

    இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர்.
    • ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரி. சென்னை குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா (21) லேப் டெக்னீசியன். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் பேசிக்கொண்டு இருத்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். 

    மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    • வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஜாமீன் கோரி பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தை போலீசார் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்து வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்திக்கு நீதிபதி இளந்திரையன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.

    மாணவி மரண வழக்கில் சிபிசிஐடியால் கைதான வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகாவுக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது.
    • கைது செய்யப்பட்டவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்து க்குட்பட்ட காஞ்சிரகோடு, பெருதிம்புழி பறம்பு விளையைச் சேர்ந்தவர் மது (வயது 42).

    இவர் மீது அடிதடி புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய போலீ சார் மதுவை கைது செய்த னர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அதன்பிறகு 2020-ம் ஆண்டு மது ஜாமீனில் வெளி வந்தார். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.இந்த நிலையில் மது திடீரென தலைமறை வானார்.

    இதையடுத்து அவரை பிடிக்க குழித்துறை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் போலீசார் மதுவை தேடி வந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் 2 ஆண்டு களாக தேடப்பட்ட மது நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அவர்கள் இருப்பது தெரியாமல் மது அங்கு வர, போலீசார் அவரை கைது செய்தனர். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 2 நாட்களுக்கு முன்னாள் போக்சோ வழக்கு சம்பந்தமாக கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகும்படி கார்த்திக்கு சம்மன் வந்தது.
    • கார்த்தியின் தாய் வீட்டின் பின் பகுதிக்கு வந்து பார்த்தபோது அங்கு கார்த்தி புளியமரத்தில் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நடுவகளப்பால் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கார்த்தி (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்தவர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்கு அவர் 'போக்சோ' சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். பிறகு கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் போக்சோ வழக்கு சம்பந்தமாக கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகும்படி கார்த்திக்கு சம்மன் வந்தது. இதுகுறித்து சாமிக்கண்ணு கோவையில் இருந்த கார்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சொந்த ஊருக்கு வந்த கார்த்தியிடம், சாமிக்கண்ணு கோர்ட்டில் ஆஜராகும்படி பணமும் கொடுத்து வீட்டில் இருந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கார்த்தியின் தாய் வீட்டின் பின் பகுதிக்கு வந்து பார்த்தபோது, அங்கு கார்த்தி புளியமரத்தில் சேலையால் தூக்கில் தொங்குவது தெரிய வந்தது.

    இதனால் பதறிப்போன அவருடைய தாயார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கார்த்தியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களப்பால் போலீஸ் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் மாரிமுத்து. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிகளாக சேர்த்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட செசன்சு கோர்ட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி, மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்தும், தலா ரூ.5 லட்சம் பிணைத்தொகையுடன் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

    இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    ×