search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்
    X

    நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்

    • ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.

    இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    Next Story
    ×