search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Absent"

    • மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • 92 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.
    • 9 மணி வரை வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

    குரூப்-1 தேர்வு

    நெல்லை மாவட்டத்தில் குரூப் -1 தேர்வானது நெல்லை மற்றும் பாளை தாலுகாவில் உள்ள 28 இடங்களில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று அனைத்து தேர்வு மையங்களிலும் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் அதற்கு 30 நிமிடம் முன்னதாகவே அதாவது 9 மணி வரை வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    59 சதவீதம்

    அதன்பின்னர் வந்தவர்கள்தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வர்கள் அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் ஒரு சில மையங்களில் நடந்தது. தேர்வானது மதியம் 12.30 மணிவரை நடைபெற்றது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 10 ஆயிரத்து 698 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை 6,288 பேர் மட்டுமே எழுதினர். 4,410 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதியவர்களின் சதவீதம் 59 ஆகும்.

    கடுமையான சோதனை

    தேர்வு எழுத வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது செல்போன், கால்குலேட்டர், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களையும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. நுழைவுச்சீட்டு, பேனா, அடையாள அட்டை ஆகியவை மட்டுமே எடுத்துச்சென்றனர்.

    3 மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்கள் உடன் வந்து தேர்வு எழுதினர். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. 12.30 மணிக்கு தேர்வு முடிவடைந்த பின்னர் அனைத்து தேர்வர்களுக்கும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    பாதுகாப்பு

    அந்த நேரத்தில் தேர்வர்கள் ஏ.பி, சி,டி என பிரிவு வாரியாக எத்தனை விடைகளை எழுதியுள்ளனர் என்பதை ஓ.எம்.ஆர்.விடைதாளில் குறிப்பிட்டனர். அதன்பின்னர் அனைத்து தேர்வர்களும் தேர்வறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

    இதனையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும்படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த தேர்வையொட்டி போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த குரூப்-1 தேர்வுக்கு 8,349 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வை 5,267 பேர் எழுதினர். 3,082 பேர் எழுதவில்லை. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தேர்வை கண்காணிக்க 3 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டிருந்தது. 26 கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×