search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி தேர்தல்"

    • என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர்.
    • இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

    இதற்காக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஓட்டலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் காலை 11 மணியளவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஓட்டலுக்கு வந்தார்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் லிப்டில் ஏறி அறைக்கு சென்ற அவர் 10 நிமிடத்துக்கு பின் மீண்டும் காரில் ஏறிச்சென்றுவிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார் வந்தார்.

    கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் ஓட்டலுக்கு வந்து சென்றதாக தெரிகிறது.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
    • இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார்.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் முடிவடைகிறது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. தேர்தலில் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் திரவுபதி முர்மு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகின்றனர்.

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, இன்று புதுவைக்கு வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தார். அவரை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    விமான நிலைய நுழைவு வாயிலில் புதுவை மாநில பா.ஜதா சார்பில் மங்கள இசையுடன் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கார்டு ஓட்டலுக்கு 12 மணிக்கு வந்தார். அங்கு பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து ஓட்டலில் உள்ள அறைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பின் தரை தளத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பா.ஜனதா அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான் குமார், ரிச்சர்டு, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், திருமுருகன், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், பிரகாஷ்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு, என்.ஆர்.காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், அ.தி.மு.க. மாநில செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை அறிமுகப்படுத்தினர். அவர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.யிடம் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரி பேசினார். தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜனாதிபதி வேட்பாளர் முர்முவுடன் மத்திய மந்திரிகள் முரளீதரன், எல்.முருகன், பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ., நீத்துதாமஸ், சுரத்குமார் முகந்தா, சுபாஷ் சந்திரா ஆகியோரும் பங்கேற்றனர். இதன்பின் அவர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

    • திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.
    • சென்னையில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆதரவு கேட்கிறார். மேலும் இன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.

    • ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு யஷ்வந்த் சின்கா நன்றி தெரிவித்தார்.
    • வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சின்கா

    சென்னை:

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார். கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த அவர், மாலையில் அண்ணா அறிவாலயம் வந்தார்.

    அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் அங்கு கூடியிருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு கோரினார்.

    இந்நிகழ்ச்சியில் யஷ்வந்த் சின்கா பேசுகையில், மதச்சார்பின்மையை காக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

    குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தன்னை தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் நான்காவது விருப்பமாகவே தன் பெயர் இருந்தாக குறிப்பிட்டார்.

    'இந்த தேர்தலில் வெற்றி-தோல்வியைத் தாண்டி நாட்டு மக்களின் ஆசியை பெறுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெற தொடர்ந்து பாடுபடுவேன். நாடாளுமன்றம் விதிகளை பின்பற்றி நடப்பதை உறுதி செய்வேன்' என்றும் சின்கா கூறினார்.

    • இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சட்டசபை செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.
    • இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஓட்டு போட வசதியாக சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் ஓட்டு சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இதனால் ஜனாதிபதி தேர்தலில் இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.

    வேட்புமனுவை வாபஸ் பெற ஜூலை 2-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ந்தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சட்டசபை செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது.

    இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஓட்டு போட வசதியாக சட்டப்பேரவை குழு கூட்ட அறையில் ஓட்டு சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    இதற்கான வாக்குப்பெட்டி டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானதும் அடுத்த வாரம் டெல்லி தேர்தல் கமிஷனுக்கு சென்று ஓட்டு பெட்டியை வாங்கி வருவார்கள்.

    இந்த பெட்டிக்கு மாற்றாக மேலும் ஒரு வாக்குப்பெட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும்.

    இந்த தேர்தலில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 234 பேரும், தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் 39 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 18 பேர் என மொத்தம் 291 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவது தொடர்பான விளக்க முறைகளை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலகம் அடுத்த வாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடை பெற உள்ளது.

    இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவது போல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்காவும் பா.ஜனதா இல்லாத பிற கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார்.

    அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை திரட்டுவதற்காக யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வந்தார்.

    அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், என்.ஆர். இளங்கோ, பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.

    வரவேற்பை பெற்றுக்கொண்ட யஷ்வந்த் சின்கா கிண்டி ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை 5 மணிக்கு கார் மூலம் யஷ்வந்த் சின்கா அண்ணா அறிவாலயம் வருகிறார்.

    அங்கு அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு கோருகிறார்.

    இன்று மாலை 7 மணிக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் யஷ்வந்த் சின்கா, கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் தங்கி விட்டு நாளை காலை ராய்ப்பூருக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்கு திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.
    • மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும்.

    திருவனந்தபுரம்:

    இந்திய ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா கேரளாவில் ஆதரவு திரட்டினார்.

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை திருவனந்தபுரத்தில் சந்தித்து பேசிய யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதி தேவையில்லை. திறமையான, நாட்டை வழிநடத்தும் எண்ணம் கொண்ட ஜனாதிபதியே வேண்டும்.

    பாரதிய ஜனதா வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர், பிரதமருக்கு பின்னால்தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் மன்மோகன்சிங் காலத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதிபா பாட்டீல் மனு தாக்கல் செய்தபோது மன்மோகன் சிங் வேட்பாளருக்கு பின்னால் நின்றிருந்தார்.

    இந்த தேர்தலில் எனக்கு போதுமான வாக்குகள் கிடைக்காது என்று கூறுகிறார்கள். எப்போதும் எண்ணிக்கை கைகொடுக்காது. தேர்தலின்போது எனக்கு போதுமான ஆதரவு கிடைக்கும். என்னை ஆதரிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    இந்தியாவில் இப்போதைய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் குறிப்பிட்ட சிலரே பயன் அடைந்தனர். அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி விட்டனர்.

    இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இது இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மோசடியாகும்.

    மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது முட்டாள்தனமான திட்டமாகும். இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடுகளுடன் விளையாடுவது ஆபத்தானது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க இதுபோன்ற திட்டங்கள் தீர்வாகாது.

    எதிர்கட்சிகளை மிரட்ட மத்திய அரசு அலுவலகங்களை ஆளும் கட்சி பயன்படுத்துகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளே இதற்கு உதாரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார்.
    • டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    புதுச்சேரி:

    இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது.

    பா.ஜனதா - கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு அவர் வருகிறார். அவரை பா.ஜனதாவினர் வரவேற்கின்றனர்.

    தொடர்ந்து அங்கிருந்து ஓட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பா.ஜனதா கூட்டணி, ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற உள்ள கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    இந்த தகவலை புதுவை மாநில ஆதரவு திரட்டுகிறார் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரையும், கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் பா. ஜனதா தேர்வு செய்தது. தற்போது எளிய குடும்பத்தில் பிறந்த அரசியல் பின்புலம் இல்லாத திரவுபதி முர்மு பா. ஜனதா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம் என்ற பிரதமரின் லட்சியத்தை உறுதிபடுத்தும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி அணியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் பா. ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக நீதி பற்றி பேசும் தி.மு.க.வினர் தங்களை சந்திக்கவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.

    மலைவாழ்சமூகத்தை சேர்ந்த திரவுபதிமுர்முவை ஆதரிக்காததால் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை.

    நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டில் முதல்முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் ஜனாதிபதி வேட்பாளராகியுள்ளார். பா.ஜனதா வேட்பாளர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புதுவைக்கு வர உள்ளார்.

    ஓட்டல் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது.

    கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரவுபதி முர்மு வருகை புதுவைக்கு வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர்.
    • சென்னையில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது.

    பா.ஜனதா-கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    இதன்படி பா.ஜனதா வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.

    சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். அன்று புதுச்சேரியிலும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    இதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    திரவுபதி முர்மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர். சென்னையில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

    • மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் தெரியவரும்.

    புதுடெல்லி :

    நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரும், ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டு உள்ளார். அதேநேரம் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை களமிறக்கி உள்ளன.

    முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தி உள்ளன. இவர் கடந்த 27-ந் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திரவுபதி முர்முவோ கடந்த வாரமே வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் இருவரும்தான் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர். இவர்களை தவிர மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் நேற்று ஆகும். நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 115 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பல்வேறு சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மராட்டியத்தை சேர்ந்த குடிசைவாசி ஒருவர், பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெயரை கொண்ட ஒருவர், டெல்லியை சேர்ந்த பேராசிரியர், தமிழகத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் என பல்வேறு தரப்பினரும் இந்த தேர்தலில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

    இந்த வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை இன்று மாலையில் தெரியவரும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை 50 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். மேலும் 50 பேர் வழிமொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.
    • திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது.

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மனுதாக்கல் செய்துள்ள யஷ்வந்த் சின்கா நேற்று முதல் பல மாநிலங்களின் தலைநகரங்களுக்கு சென்று பிரசாரத்தை தொடங்கினார். பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கேட்டு வருகிறார்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கேட்கவுள்ளார். இதற்காக, நாளை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திக்கிறார்.

    நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவை யஷ்வந்த் சின்ஹா கோருகிறார்.

    • கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகம்மது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
    • நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார்.

    கோவை:

    ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது என்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    இவர் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார்.

    சாத்தான்குளம், ஆண்டிப்பட்டி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் என பல்வேறு தேர்தல்களை சந்தித்த இவர் தற்போது ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் டெல்லி சென்று மனுதாக்கல் செய்தார்.

    இதுவரை நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார். எந்த பகுதியில் தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்கிறார் நூர்முகம்மது.

    நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மன்னர் வேடம் அணிந்து கொண்டு வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்தார்.

    நூர்முகம்மது

    ×