search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனாதிபதி தேர்தல்: 39-வது முறையாக களமிறங்கும் கோவை தேர்தல் மன்னன்
    X

    ஜனாதிபதி தேர்தல்: 39-வது முறையாக களமிறங்கும் கோவை தேர்தல் மன்னன்

    • கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகம்மது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
    • நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார்.

    கோவை:

    ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது என்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    இவர் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார்.

    சாத்தான்குளம், ஆண்டிப்பட்டி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் என பல்வேறு தேர்தல்களை சந்தித்த இவர் தற்போது ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் டெல்லி சென்று மனுதாக்கல் செய்தார்.

    இதுவரை நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார். எந்த பகுதியில் தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்கிறார் நூர்முகம்மது.

    நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மன்னர் வேடம் அணிந்து கொண்டு வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்தார்.

    நூர்முகம்மது

    Next Story
    ×