search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை"

    • சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.
    • இதையொட்டி 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    சேலம்:

    சேலம் - ஈரோடு வழித்தடத்தில் தண்டவாள மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் சேலம் ரெயில் நிலையத்தில் நாளை (20-ந்தேதி), நாளை மறுநாள் (21-ந்தேதி) ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்- கரூர், கரூர்-சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் முழுைமயாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதன் காரணமாக கோவை- சேலம் ரெயில் (வண்டி எண். 06802) , கோவையில் இருந்து புறப்பட்டு, ஈரோடு வரை இன்று முதல் 21-ந்தேதி வரை பகுதியாக மட்டும் இயக்கப்படுகிறது. ஈரோடு- சேலம் இடையே இந்த ரெயில் இயக்கப்படாது.

    அதுபோல் சேலம்- கோவை ரெயில் (வண்டி எண். 06803) ஈரோட்டில் இருந்து புறப்பட்டு, கோவை சென்றடையும். சேலம்- ஈேராடு இடையே இயக்கப்படாது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • முகாமில் பெண்கள் உட்பட 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    • 105 நபர்கள் மதுரையிலுள்ள கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிராம்பட்டினம் லயன் சங்கம், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடத்தினர்.

    முகாமிற்கு அதிராம் பட்டினம் லயன் சங்க சாசன தலைவர் லயன் பேரா. அப்துல் காதர், மாவட்ட தலைவர்கள் லயன் எஸ். எம். முகமது முகைதீன், அகமது, அப்துல் ஜலீல், அப்துல் ரஹ்மான், இயக்குனர்கள் லயன் அப்துல் ஹமீது, லயன் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமை மாவட்ட முன்னாள் ஆளுநர் பி.எம்.ஜே.எப். லயன் எஸ்.முகமது ரபி துவக்கி வைத்தார்.

    சிறப்பு அழைப்பாளராக சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சுப்ரமணியன், எம்சி.அலுமினி லயன்ஸ் சங்க சாசன தலைவர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு, நகர் மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதன் ஒருங்கிணைப்–பாளராக லயன் பேரா. செய்யது அஹமது கபீர், மாவட்ட தலைவர் மற்றும் லயன் குப்பாசா அகமது கபீர், துணைத்தலைவர்ஆகியோர் இருந்தனர். இந்த முகாமில் பெண்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொ ண்டனர். இதில் 105 பேர் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் லயன் சங்க தலைவர் மேஜர் டாக்டர் கணபதி, செயலாளர் டாக்டர் லயன் முருகானந்தம், பொருளாளர் லயன் செல்வராஜ் உட்பட அதிரை லயன் சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், இயக்கு னர்கள் உறுப்பினர்கள் என பல கலந்து கொண்டனர்.

    • முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
    • தங்களது சொத்தின் ஆவணங்களை சுபமுகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொத்துக்கான ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தமிழக அரசு பத்திரப்பதிவுகளை ஆன்லைன் முறையில் மாற்றியதை தொடர்ந்து பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் தங்களது பத்திரங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.

    ஒரு சிலர் சுப முகூர்த்த நாளில் தங்களது சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய விரும்பி அதற்கு ஏற்றது போல் முன்பதிவு செய்து சுப முகூர்த்த நாளில் தங்களது பத்திரத்தை பதிவு செய்கின்றனர். இதனால் முகூர்த்த நாட்களில் பத்திர பதிவு செய்ய வருபவர்கள் எண்ணிக்கை மற்ற சாதாரண நாட்களை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுபமுகூர்த்த தினம் என்பதால் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் புதிதாக வாங்கியுள்ள சொத்தின் ஆவணங்களை பதிவு செய்ய முன்பதிவு செய்து நேற்று முன்தினம் காலை ஆவண பதிவுக்காக கும்பகோணம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    ஆனால் கும்பகோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காலை இணையதள சேவை முடங்கியது.இதனால் எந்த ஒரு ஆவணத்தையும் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவியது.

    முன்பதிவு செய்து வந்திருந்த பொதுமக்கள் ஆவண பதிவுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் அன்று முழுவதும் இணையதள சேவை கிடைக்காததால் எந்த ஒரு ஆவணமும் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • ஆம்புலன்சுக்குண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவமனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    கீழையூர் ஒன்றியம் காமேஸ்வ ரத்தில் இயங்கி வரும் கோவாச் ஆஸ்பத்திரிக்கு சேவ்திசில்ரன்ஸ்அமைப்பு மூலம் இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.

    அப்போது ஆம்புலன்சுக்கு உண்டான ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவ மனையின் இயக்குனர் மரான்சிஸ்காளிடம் வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பச்சைக்கொடி கான்பித்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகை சுகாதார பணிகள் இணை இயக்குநர் ஜோஸ்பின்ஆமுதா, திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், கீழையூர் ஒன்றியக்குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா இளம்பரிதி, கீழையூர் ஒன்றிய குழு துணை தலைவர் சவுரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன் மற்றும் மலர் கலந்துகொண்டனர்.

    • மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற வேண்டிய பரமத்தி வட்டார விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, செல்போனுக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை ஒரு மாதம் நீட்டடிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரெயில் ஜூலை மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அந்த ரெயில் சேவை தற்போது ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தி–்ராபாத்தில் இருந்து ஆகஸ்டு 1 முதல் 22-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை செல்லும்.

    மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து ஆகஸ்டு 3 முதல் 24-ந் தேதி வரை புதன்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.

    இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ெரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ெரயிலின் சேவை வேளாங்கண்ணி வரை, நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி எர்ணா குளத்தில் இருந்து அடுத்த மாதம் 13-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சேரும்.

    மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 14 முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 6.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும்.

    இந்த ரெயில்கள் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் சேவையை அதிகரித்துள்ளன
    • பயணக்கட்டணம் இருமடங்காகி விடுகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிேகா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவலால் வெளிநாட்டு சேவை மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இருந்த போதும் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

    இதில் திருச்சி விமான நிலையம் கூடுதல் மீட்பு விமானங்களை இயக்கி அதிகளவில் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்டு அழைத்து வந்த வழிதடத்தில் முதலிடத்தில் உள்ளது.

    இதற்கிடையே உலக அளவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கியது. தொடக்க நாட்களில் குறைந்தளவில் விமான சேவை தொடங்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகளின் வரத்து அதிகரிப்பால் தங்கள்சேவையை அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானத்தின் இருக்ககைளும் நிரம்பி விடுவதால் அடுத்தடுத்த நாட்களில் பயணக்கட்டணம் இருமடங்காகி விடுகிறது.

    இதனால் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு சேைவயை மட்டுமே அளித்த விமான நிறுவனங்கள் தற்போது 2 அல்லது 3 விமான சேவைகளாக அதிகரிக்க முன்வந்துள்ளன.

    அது மட்டுமின்றி கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் குவைத், தோகா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இல்லாத பட்சத்தில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தலா இருசேவையை இங்கிருந்து அந்த நாடுகக்கு தொடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் வெளிநாட்டு பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் சாதனை படைக்கும் என்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

    • ரத்ததான சேவை விருது கலெக்டர் வழங்கினார்.
    • அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     மதுரை

    மதுரை மருத்துவக் கல்லூரியில் ரத்ததான சேவையில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், ரத்ததான வங்கித் துறை தலைவர் சிந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாவட்ட எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் ஜெயபாண்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி பாராட்டினார்.

    • மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் 28-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணியளவில் மதுரை பீ.பி.குளத்தில் உள்ள தெற்குமண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. இதற்கான புகார் மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17-ந் தேதியாகும்.

    தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்ப ப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    புகார், சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத்தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட குறை தீர்க்கும் முகாம் சம்ப ந்தப்பட்ட அளவில் ஏற்க னவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்பட மாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப டமாட்டாது. குறைகளை "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்" ஜே.பிரதீப்குமார் உதவி இயக்குநர், அஞ்சல்துறைத்தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்

    pg.madurai@indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார்களை அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜூன் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மண்டல அஞ்சல்துறை அலுவலக உதவி இயக்குநர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

    ×