search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு சேவையை அதிகரிக்கும் விமான நிறுவனங்கள்
    X

    திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு சேவையை அதிகரிக்கும் விமான நிறுவனங்கள்

    • திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு விமான நிறுவனங்கள் சேவையை அதிகரித்துள்ளன
    • பயணக்கட்டணம் இருமடங்காகி விடுகிறது.

    திருச்சி:

    திருச்சி விமான நிலைத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு இண்டிேகா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மலிண்டோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்கள் விமான சேவை அளித்து வருகின்றன. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சி விமான நிலையம் உள்ளது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவலால் வெளிநாட்டு சேவை மட்டுமின்றி உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இருந்த போதும் நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை மீட்க சிறப்பு மீட்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

    இதில் திருச்சி விமான நிலையம் கூடுதல் மீட்பு விமானங்களை இயக்கி அதிகளவில் வெளிநாடு வாழ் இந்தியர்களை மீட்டு அழைத்து வந்த வழிதடத்தில் முதலிடத்தில் உள்ளது.

    இதற்கிடையே உலக அளவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கியது. தொடக்க நாட்களில் குறைந்தளவில் விமான சேவை தொடங்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகளின் வரத்து அதிகரிப்பால் தங்கள்சேவையை அதிகரித்து வருகின்றன. பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமானத்தின் இருக்ககைளும் நிரம்பி விடுவதால் அடுத்தடுத்த நாட்களில் பயணக்கட்டணம் இருமடங்காகி விடுகிறது.

    இதனால் தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு சேைவயை மட்டுமே அளித்த விமான நிறுவனங்கள் தற்போது 2 அல்லது 3 விமான சேவைகளாக அதிகரிக்க முன்வந்துள்ளன.

    அது மட்டுமின்றி கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் குவைத், தோகா ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இல்லாத பட்சத்தில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தலா இருசேவையை இங்கிருந்து அந்த நாடுகக்கு தொடங்கியுள்ளது. இதனால் வரும் காலங்களில் வெளிநாட்டு பயணிகளை கையாள்வதில் திருச்சி விமான நிலையம் சாதனை படைக்கும் என்கின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.

    Next Story
    ×