search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் திருட்டு"

    • செல்போனை திருடிக்கொண்டு தப்பிஓட முயன்றார்.
    • போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்யபட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள ஜல்லிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்(32). இவரது தம்பி மகேஸ். அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று தினேஸ் புதிய வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது மர்மநபர் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது. அவர் விழித்து எழுந்து அவரை பிடிக்க முயன்றார்.

    அப்போது வீட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தென்கரை சேவியர் தெருவை சேர்ந்த தவமணி மகன் மனோஜ்(20) என்பவர் தப்பிஓட முயன்றார். அவரை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் 6-வது வார்டு ஓடைக்காரத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ஷீலாதேவி(34). இவர் கூடலூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிவேல்பிள்ளை தெருவில் நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.

    இதுகுறித்து ஷீலாதேவி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது 2 செல்போன்களை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    பெரியகுளம் ஏ.மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் தேனியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு புகுந்த பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (29) என்பவர் 2 செல்போன்களை திருடிச் சென்றார்.

    இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது தென்கரை, பெரியகுளம், பழனி செட்டிபட்டி போலீசில் ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தங்கமுத்து ப்பிள்ளை (80). இவர் பட்டாளம்மன் முத்தையா கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளில் இருந்த வெள்ளி நகையை திருடிச் சென்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவர் இன்று வீட்டின் அருகே பல்லவன் நகர் பகுதியில் செல்போனில் பேசியபடியே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

    அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது
    • தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    வளசரவாக்கம், அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் புதிதாக கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு தொழிலாளர்கள் முதல் தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம வாலிபர் ஒருவர் தொழிலாளர்கள் கீழே வைத்திருந்த செல்போன்களை திருடினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிம்மாச்சலம் என்கிற சிவா (வயது23) என்பது தெரிந்தது. அவனை போலீசார் கைது செய்தனர். சிவா மீது ஏற்கனவே பாண்டி பஜார், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் போக்சோ வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    • செல்போன் திருட்டு தொடர்பாக அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.

    கொளத்தூர்:

    புழுதிவாக்கம், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் அழகப்பன். தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நேற்று பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அழகப்பன் தனது விலை உயர்ந்த செல்போனை அங்கிருந்த மேஜை மீது வைத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போன் திருடுபோய் இருந்தது.

    கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஜவுளி வாங்க, வாடிக்கையாளர் போல் வந்த 2 இளம்பெண்கள், நடிகர் அழகப்பனின் செல்போனை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து நடிகரின் செல்போனை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    போரூர்:

    செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை மனைவி, மகளுடன் மருத்துவ சிகிச்சைக்காக கே.கே.நகர் வந்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அசோக் நகர் உதயம் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இருந்து மாநகர பஸ்சில் (எண்113) ஏறினார். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மாயமாகி இருப்பது கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    இதுகுறித்து கே.கே நகர் போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • விகர்வூ நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார்.

    போரூர்:

    வளசரவாக்கம் பாலாஜி அவின்யூ பகுதியை சேர்ந்தவர் சாந்தி. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென சாந்தியின் செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் விகர்வூ (வயது 21) வளசரவாக்கம் சவுத்ரி நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென விகர்வூவின் கைப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அதில் ரூ.500 ரொக்கம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது.

    கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போன் திருடியதால் தலையில் கல்லை போட்டு ரவுடியை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார்.
    • குடிபோதையில் அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது.

    மதுரை

    மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள அரசினர் மாணவர் விடுதி வளாகத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். அந்த நபர் தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவரின் மகன் உதயகுமார் என்ற கொக்கி குமார் என்பது தெரியவந்தது. பிரபல ரவடியான இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசா ரணையில் கொக்கி குமாரை அவரது கூட்டாளியான மற்றொரு ரவுடி கொலை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நாகமலை புதுக்கோட்டை யை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது போலீஸ் நிலை யங்களில் பல்வேறு வழக்கு கள் உள்ளன. இவரும், கொலையான கொக்கி குமாரும் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ள னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேசின் செல்போனை கொக்கி குமார் திருடி விட்டதாக தெரிகிறது. இதை அறிந்த விக்னேஷ் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று கொக்கி குமார் அரசு மாணவர் விடுதி வளாகத்தில் இருப்பதை அறிந்த விக்னேஷ் குடிபோதையில் அங்கு சென்று அவரிடம் பிரச்சினை செய்ததாக தெரிகிறது. இதில் 2 பேருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போதையில் இருந்த விக்னேஷ், கொக்கி குமாரை கீழே தள்ளி அருகில் இருந்த பாறாங்கல்லை தலையில் போட்டுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தி லேயே கொக்கி குமார் பரிதாபமாக இறந்தார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தலைமறை வாக உள்ள விக்னேஷ் போலீ சார் தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • வேலூரில் 2 பேர் கைது
    • 4 செல்போன்கள் பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் ஓய்வு அறை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களில் இருந்த செல்போன்கள் திருடு போனது.

    இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் 2 பேர் குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்து டாக்டர்கள் அறை மற்றும் கார்களில் செல்போன் திருடியது. மற்றும் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு பகுதியில் நடமாடியது பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் தெரிந்து கொண்டனர். இது குறித்து தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள காவலர்களுக்கும் படங்களை அனுப்பி கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் செல்போன் திருடர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தனர்.

    அவர்களை அடையாளம் கண்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கார்த்தி (வயது 22) ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி (45) என்பது தெரிய வந்தது.

    மது போதைக்கு அடிமையான இவர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செல்போனை திருடி ரூ.1000 முதல் 2000 வரை விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தில் மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணம் தீர்ந்து விட்டதால் மீண்டும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்போன் திருட வந்த போது பிடிபட்டுள்ளனர்.

    அவர்களிடமிருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி கார்த்தி இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    தேனி:

    தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சரண்யா (வயது32). இவர் புதிதாக நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலை திறக்க உள்ளதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பழனிசெட்டிபட்டி வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.

    இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் குணசீலன் (34). இவர் மதுரையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொண்டு தாமரைக்குளம் வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    • யுவராஜ் சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி எம்.ஜி.சக்ரபாணி நகர் வழியாக செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×