தேனியில் இளம்பெண்ணிடம் பணம், செல்போன் திருட்டு

தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் சரண்யா (வயது32). இவர் புதிதாக நாட்டுச்சர்க்கரை தொழிற்சாலை திறக்க உள்ளதால் அதற்கு தேவையான பொருட்களை வாங்க பழனிசெட்டிபட்டி வந்தார். அங்கு தனது மோட்டார் சைக்கிளில் ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்களை வைத்து சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் திருடுபோயிருந்தது.

இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்தவர் குணசீலன் (34). இவர் மதுரையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது உறவினர் மோட்டார் சைக்கிளை பெற்றுக் கொண்டு தாமரைக்குளம் வந்தார்.

சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com