என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பெரியகுளத்தில் வீடுபுகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
- செல்போனை திருடிக்கொண்டு தப்பிஓட முயன்றார்.
- போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்யபட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள ஜல்லிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்(32). இவரது தம்பி மகேஸ். அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று தினேஸ் புதிய வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது மர்மநபர் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது. அவர் விழித்து எழுந்து அவரை பிடிக்க முயன்றார்.
அப்போது வீட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தென்கரை சேவியர் தெருவை சேர்ந்த தவமணி மகன் மனோஜ்(20) என்பவர் தப்பிஓட முயன்றார். அவரை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






