search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்பி"

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
    பனாஜி:

    கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி லிங்கேசுவரர் கோவிலுக்குள் சென்ற வாலிபர் ஒருவர், மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலையுடன் சேர்ந்து செல்பி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கேசுவரருடன் தான் இருப்பது போல் செல்போனில் செல்பி எடுத்தார்.

    இதை பார்த்த மேலும் சில பக்தர்கள் தாங்களும் செல்பி எடுக்க முயன்றனர். கோவில் அர்ச்சகர்கள் செல்பி எடுத்த நபரை பிடித்து செயல் அலுவலர் அழகேசனிடம் அழைத்து சென்றனர். அவர் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த துரை (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் கோவிலுக்குள் மூலஸ்தான சுவாமியை படம் பிடிக்க கூடாது என்று செயல் அலுவலர் எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×