search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய கிரகணம்"

    • அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது.
    • சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது

    விழுப்புரம்: 

    மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது. பரிகார பூஜைகள் நடைபெற்று மீண்டும் கோவில் திறக்கப்படும். வழக்கம் போல் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • 25-ம்தேதி பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை சூரிய கிரகணம் சம்பவிக்கப் போகிறது.
    • இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம்.

    கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு சற்று கடுமையாக இருக்கும். சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய் வழிக் கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும்.

    கிரகணம் சம்பவிக்கும் போது ராகு, கேது, சூரியன், சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும் அந்த சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பாதிக்கப்படும். கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் + ராகு, கேது அல்லது சந்திரன் + ராகு, கேது சேர்க்கை இருக்கும். இந்த கிரக இணைவை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சம சக்திகள் இருக்கும் . தீய சக்திகள், பில்லி சூனியம், மாந்தரீகம், செய்வினை எளிதில் தாக்காது.

    புண்ணிய பலன் மிகுந்து கொண்டே இருக்கும். கிரகணத்தில பிறந்தவர்களுக்கு சூரியன் + ராகு, கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம் நோய் தாக்கம், மன வளர்ச்சி குறைவு, ஆயுள் குறைவு, தீராத கடன், வறுமை, வம்பு வழக்கு, முன்னேற்றக் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத்தடையாலும் பெரும் பாதிப்பை அடைகின்றனர். திருமணத் தடையை சந்திப்பவர்களில் தலைகீழாக நின்றும் திருமணமே நடக்காதவர்கள் சிலர் கிரகண காலங்களில் பிறந்தவர்கள். அப்படி என்ன பாவம் செய்து கிரகண காலத்தில் பிறந்தார்கள் என்ற கேள்வி வாசகர்களுக்கு இங்கே எழும்.

    மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிரான பின்வரும் காரியங்களில் ஈடுபட்டதன் வினைப் பதிவாகும். வட்டித்தொழில் செய்தவர்கள், காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது,பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது, பசுக்களை, விலங்குகளை வதைப்பது, இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்றவையாகும்.

    கிரகண தோஷத்தை பாதிப்பை கிரகண கால வழிபாட்டின் மூலமே தீர்க்க முடியும்.

    ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சுப வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 திருக்கணித பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அமாவாசையன்று பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 7-ம் இடமான துலாம் ராசியில் சம்பவிக்கப் போகிறது.

    இந்தியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம். சூரியன், சந்திரனுக்கு ராகு, கேது சம்பந்தம் இருப்பது கடுமையான பித்ரு தோஷம்.அந்த கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும்.

    ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும். சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வதால் ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும்.

    • இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் சூரிய கிரகணம் தெரியும்.
    • கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது.

    தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும்.

    கிரகண உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய கிரகணத்தை சிறிது நேரம் கூட வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகையான தரிசனமும் ரத்து.
    • சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
    • அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    திருமலை

    வருகிற 25-ந்தேதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், ஸ்ரீவாணி, ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் பிற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதேபோல் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைப்பதில்லை. அதன்படி திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில், வைகுந்தம் கியூ வளாகத்தில் அன்னபிரசாதம் வழங்கப்படாது.

    எனவே, பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு திருமலைக்கு திட்டமிட்டு வரவேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும்.
    • கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும். ஆகையால் கோவிலில் பூஜை செய்யும் நமது சமூக சொந்தங்கள் அன்று மாலை கோவில்களை மாலை 6.15 மணிக்குமேல் திறந்து வழக்கமான பூஜைகளை செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும் முருகன் கோவில் பிரதானமாக உள்ள கோவில்கள் சூரசம்ஹார கொடியேற்றத்தினை மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும், சாந்தி செய்வது உத்தமம். மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.

    சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

    மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது.

    ×