search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டம்"

    • கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
    • 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் வெள்ளகோவில் கிராம பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இலுப்பைகிணறு என்ற இடத்தில் கும்பலாக ஆட்கள் நின்று கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.

    அங்கு சென்று பார்த்தபோது சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்துக்கு ஏற்பாடு செய்த வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது33) உள்ளிட்ட 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ. 12,200 பணம் மற்றும் 10 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • 7 பேரை போலீசார் கைது செய்தும் தொடர்நது அவர்களிடமிருந்து ரூ.8,350ஐ கைப்பற்றப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில் மின்சார வாரிய அலுவலகம் அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ராமகிருஷ்ணன் (53), சக்திவேல் (66), ஈஸ்வரன் (60), பழனிச்சாமி (47), அழகர் (55), சண்முகம் (50), கோபால் (65) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.8,350ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதுர நகரில் சாய் கணேஷ் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசதி படைத்த ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பில் வசிக்கும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    கடந்த 2 மாதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சூதாட்டம் நடப்பது குறித்து குடியிருப்பை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலீல் பாஷா தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைந்தனர்.

    அப்போது ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதனைக் கண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் மற்றும் சூதாட்டம் நடத்திய 52 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.1.12 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 5 பேர் பெண் தொழிலதிபர்கள் 7 பேர் குடும்ப தலைவிகள் என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர்களின் அனுமதியோடு இவர்கள் சூதாட்டத்தில் ஈடபட்டது தெரியவந்தது. சூதாட்டத்தில் பெண்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல ஊர்களை சேர்ந்த வாலிபர்கள் வந்து கலந்து கொள்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    பணம் வைத்து சூதாட்டம் மட்டுமின்றி சேவல்களை களத்தில் விட்டும் சூதாட்டம் நடைபெறுவதாகவும், அதன்படி வேடசந்தூர் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கோடாங்கிபட்டி பகுதியில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெற்றது தெரிய வரவே அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட விஜயகுமார், செல்வக்குமார், கனகராஜ், பிரபாகரன், ரஞ்சித்குமார், ஆனந்தன், சிவசெல்வன், தளபதி, முத்துச்சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 4 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பயணத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சிலர் தப்பி ஓடியதால் அவர்களையும் தேடி வருகின்றனர். கிராமப்புறங்களில் தொடர்ந்து சூதாட்டம் நடத்தப்பட்டு வருவதால் பலர் பணம், நகை உள்ளிட்ட பொருட்களை இழந்து செல்கின்றனர். மேலும் சூதாட்டத்தின்போது அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.

    எனவே போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி இதுபோன்ற சூதாட்டங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட நபர்கள் நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்பாகவுண்டன், கார்த்தி, வேடியப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் உட்பட 20பேரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள வீட்டில் நள்ளிரவில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    விரைந்து சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் உட்பட 20பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ70ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.
    • 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீசார் கல்லேறி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்தனர்.

    உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், கல்கொண்டபள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாத் (வயது40), பிரகாஷ் (42), எஸ்.குருப்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ், லோகேஷ், சேத்தன்குமார் (26), சத்யராஜ் (26) ஆகிய 6 பேரை சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்து 650-யையும், சீட்டு கட்டையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள கிளப்பில் சூதாட்டம் நடப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கிளப்பிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு சூதாட்டம் நடத்தி வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரம் பறி முதல் செய்யப்பட்டது.

    • நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,

    கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.

    இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

    ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

    இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.

    பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள உப்பிலிபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கருப்பராயன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன், சிவராஜ், பரமசிவம் ஆகிய 4 பேரை கைது செய்து அவரிடமிருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கம் ரூ.1,600 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் அவினாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டறை பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பழனிச்சாமி மகன் ரமேஷ் (வயது 34), ஆனந்த் மகன் தினேஷ் (27) மற்றும் சீனிவாசன் (58) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து பணம் ரூ. 450 ,சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை அவினாசி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை பொருட்கள் இருந்தன. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 5 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

    ×