search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர்கள்- 13 பேர் கைது
    X

    ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலதிபர்கள்- 13 பேர் கைது

    • ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மதுர நகரில் சாய் கணேஷ் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசதி படைத்த ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர்.

    குடியிருப்பில் வசிக்கும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    கடந்த 2 மாதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    சூதாட்டம் நடப்பது குறித்து குடியிருப்பை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலீல் பாஷா தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புகள் நுழைந்தனர்.

    அப்போது ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    இதனைக் கண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் மற்றும் சூதாட்டம் நடத்திய 52 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கட்டுகட்டாக ரூ.1.12 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் 5 பேர் பெண் தொழிலதிபர்கள் 7 பேர் குடும்ப தலைவிகள் என தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர்களின் அனுமதியோடு இவர்கள் சூதாட்டத்தில் ஈடபட்டது தெரியவந்தது. சூதாட்டத்தில் பெண்கள் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×