search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூதாட்டம்"

    தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீசார் தேவபாண்டலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். தேவபாண்டலம் சுடுகாடு அருகே பணம் வைத்து 7 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர்.

    விசாரணையில், தேவபாண்டலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 34), பிரகாஷ் (30), தயாநிதி (33), பத்ரிநாத் (23), அன்பரசன் (34) மற்றும் வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40), ராஜ்குமார் (28) என்பது தெரியவந்தது. 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சங்கராபுரம் போலீசார் அவர்களை கைது செய்தனர்.


    • ஜெயங்கொண்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல்

     ஜெய ங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அடுத்து நாகல் குழி குறிசாலையில் தொடர்ந்து பணம் வைத்து பலர் சீட்டு விளையாடுவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் நடேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்த வீரமணி, ராஜா, சுரேஷ் ,மன்னார், என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3500 பணம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவினாசி:

    அவினாசி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவினாசி ராயம்பாளையம் ரோட்டில் சங்கமம் குளம் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக மடத்துப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 37), காந்திபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (52), தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகராஜன் (43), மோகன் (46), முகமது யாசிக் (34), திருமுருகன் பூண்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (60), கருமாபாளையத்தைச் சேர்ந்த சித்திக் (47) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகள் கொண்ட சீட்டு கட்டு மற்றும் ரூ. 850-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் அரசம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள மயான பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கருப்பன்(வயது24), குரு(26), கணபதி (28), பிரபாகரன் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.120 பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவத்தன்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கந்தசாமி என்பவர் தோட்டத்தில் வேலம்பாளையத்தை சேர்ந்த காங்குசாமி (வயது 68), துரைசாமி (51) ,ரவி (60) ,சுப்பிரமணி (52) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. ஆயிரத்து 300ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது.
    • இவர் இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சசித்ரா செனநாயகே கடந்த 2020-ம் ஆண்டு லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் (மேட்ச் பிக்சிங்) ஈடுபட 2 வீரர்களை அணுகியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூதாட்ட புகார் குறித்து விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு செனநாயகே 3 மாதத்துக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் செனநாயகே விளையாட்டு ஊழல் தடுப்பு புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் நேற்று காலை சரண் அடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    38 வயதான சசித்ரா செனநாயகே இலங்கை அணிக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    • 9 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் பிரிதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காலனி தகன மேடை அருகே சிலர் அமர்ந்து கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 10- க்கும் மேற்பட்ட வர்கள் தப்பி ஓடினர். போலீசார் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து மகன் வரதன் (வயது 38) உள்ளிட்டோர் தப்பி ஓடியது தெரியவந்தது. அங்கிருந்த ரூ.560 பணம் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் வரதன் உள்ளிட்ட தப்பி ஓடிய வர்களை தேடி வருகின்ற னர்.

    • வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்,ஆக.22-

    வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வெள்ளகோவில், மூலனூர் ரோடு, ஈஸ்வரன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அங்குராஜ் (வயது 25),கோபிநாதன் (27), மகாதேவன் (37), கார்த்தி( 28) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,150ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழக - ஆந்திரா எல்லையோரம் சூதாட்டம்
    • ரூ.52 லட்சம் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும்,

    இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவ தாகவும் தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில் குடியாத் தம் அருகே உள்ள தமிழக-ஆந் திர மாநில எல்லையோர முள்ள சைனகுண்டா கிரா மம் அருகே ஒரு மாந்தோப் பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண் ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்து சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப் பிரண்டு (பயிற்சி) பிரசன்னகு மார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் பைக்கில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.

    அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

    17 பேரை போலீசார் பிடித்த னர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் 2 பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த பணத்தை குடியாத் தம் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் எடுத்து வந்து எண்ணப்பட் டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.

    மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்ற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனி வாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்தரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய் தனர்.

    ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும்.

    குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறு வதாகவும், காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    • சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

    அதன்படி ஓசூர், மத்திகிரி, பாகலூர், சூளகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம் பட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர், சாமல்பட்டி, கல்லாவி பகுதிகளில் பணம் வைத்து சூதாடிய 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், சூளகிரி, பர்கூர், கந்திகுப்பம் பாரூர், நாகரசம்பட்டி, ராயக்கேர்டடை, உத்தனபள்ளி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, மத்தூர் பகுதிகளில் மளிகை, பெட்டிக்கடையில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கெலமங்கலம் சீனிவாசன் (வயது35), சிங்காரப்பேட்டை ஜாவித் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யபட்டன.

    இதே போல கஞ்சா விற்றதாக ஓசூர் வாசவி நகர் குல்லா (20), தளி சாலை சுதர்சன் (23), சிகரலப்பள்ளி கோவிந்தசாமி (40), தம்ம கவுண்டனூர் பவுனம்மாள் (60) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சந்தப்பட்டி, செட்ரப்பட்டி, மூக்கனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்ற தடுப்பு நடவடக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் வளைத்து பிடித்து விசாரணை செய்ததில் சந்தப்பட்டி சேர்ந்த பழனி மகன் சரவணன் (30), சுப்பிரமணி மகன் பழனி (47), பொன்னுசாமி மகன் ராமு (50) மற்றும் பெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் வெங்கடேசன் (42) என தெரிய வந்தது.

    இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும், ரூ. 80 பணத்தை பறிமுதல் செய்தனர். 

    • கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.
    • 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் புது உச்சிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் பாலாஜி (வயது 27), நாராயணன் மகன் ரவி (35), சுப்பிரமணியன் மகன் சிலம்பரசன் (27), ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (34), கோவிந்தசாமி மகன் முருகன் (45), ராஜமாணிக்கம் மகன் பாலகிருஷ்ணன் (39) மற்றும் கூத்தக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (29) என்பதும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 40 புள்ளி தாள் ரூ.700 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×